விவேக்கின் கனவை நினைவாக்க விஜய் ரசிகர்கள் எடுத்துள்ள சபதம் – இதோ அதன் முதல் படி.

0
1178
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் நேற்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இதையும் பாருங்க : எவ்ளோ டிங்கரிங் பண்ணாலும் இது பரணிக்கும் ஓவியாவுக்கும் பண்ணது தான் ஞாபகம் வருது – ஜூலி செய்த்தவருக்கு ஜூலி கொடுத்த பதில்.

- Advertisement -

அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது இதற்கு பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். விவேக் இருந்த போது கிரீன் கலாம் மூலம் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்பதை ஒரு இலக்காக கொண்டுவந்தார். இதுவரை அவர் 30 லட்சத்துக்கும் மேலான மரங்களை நட்டு இருந்தார்.

விவேக் இறந்துவிட்டதால் அவரின் 1 கோடி மரக் கன்று கனவு நிறைவேறதா என்று பலர் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், நேற்று விவேக் இறந்த போது பலரும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மரக் கன்றுகளை நட்டனர். இப்படி ஒரு நிலையில்  விவேக்கின் ஒரு கோடி மரக் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் சபதம் எடுத்துள்ளனர். அதன் முதல் படியாக அவர்கள் மரம் நடும் பணியையும் தொடங்கி விட்டனர்

-விளம்பரம்-
Advertisement