மனைவியின் தலையுடன் 20 கி.மீ பைக்கில் பயணம்.! போலீஸை கதிகலங்க வைத்த கணவர்

0
243

கர்நாடகாவில், மனைவியின் தலையை வெட்டிய கணவர், வெட்டிய தலையைப் பையில் எடுத்துக்கொண்டு போலீஸில் சரணடைய 20 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணித்துள்ளார். கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரு அருகே உள்ள சிவானி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ். இவரின் மனைவி ரூபா. இவர்களுக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன.

wife

இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், ரூபாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சதீஸ்க்கு தெரிய வரவே, ரூபாவைக் கண்டித்துள்ளார். இருப்பினும், ரூபா சதீஸின் பேச்சைக் கேட்கவில்லை. ரகசியமாக அந்தத் தொழிலாளியைச் சந்தித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதியன்று பெங்களூரு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார் சதீஸ். அப்போது, ரூபாவுடன் அந்த தொழிலாளியை சேர்த்துப் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஸ் இருவரையும் அடித்து, கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது, அருகில் கிடந்த வெட்டுக்கத்தியை எடுத்து இருவர் மீதும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயங்களுடன் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். ஆனால், மிகுந்த கோபத்தில் இருந்த சதீஸ் ரூபாவின் தலையைத் துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

man

அதன் பின்னர், ஒரு பையில் ரூபாவின் தலையை எடுத்துக்கொண்ட சதீஸ், போலீஸில் சரணடைய 20 கிலோ மீட்டர் பைக்கில் பயணித்துள்ளார். காவல் நிலையத்துக்குச் சென்ற அவரை போலீஸார் கைது செய்தனர். மனைவியின் தலையுடன் போலீஸில் சரணடைய வந்த சதீஸை அங்கிருந்த காவலர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

போலீஸ் அதிகாரி கூறுகையில், `தனது மனைவியைக் கொலை செய்ததிற்கு சதீஸ் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த தொழிலாளியைக் கொலை செய்யவில்லை என்றே ஆதங்கப்பட்டார். அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.