என்னது கானா பாலா, வக்கீலா – அப்போ ஒரு நாளைக்கு இவ்ளோ சம்பாதிச்சாராம் – ஆனால், இன்று அவர் நிலை.

0
19497
gana
- Advertisement -

தமிழ் சினிமாவில் கானா பாடல்களுக்கு என்று எப்போதும் தனி இடம் இருக்கிறது தொடங்கி தற்போது இருக்கும் சந்தோஷ் நாராயணன் வரை பல்வேறு இசையமைப்பாளர்களின் படங்களில் கானா பாடல் தான் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது சங்க காலத்திலேயே தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது கானா பாடல்கள் என்று சொன்னதும் ஒரு சிலர் மட்டுமே நம் நினைவிற்கு முதலில் வந்துவிடுவார்கள் அந்த வகையில் கானா பாலாவும் ஒருவர் இவரது உண்மையான பெயர் பாலா முருகன் மேலும் இவரை அனாதை பாலா கானா குயில் கிங் பாலா என்றும் அழைப்பார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலா பேசுகையில், தான் கல்லூரியில் இருக்கும் போதே பல பாடல்களை பாடியுள்ளதாகவும் அதன் பின்னர் படித்து முடித்துவிட்டு வழக்கறிஞ்சராக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். மேலும், வழக்கறிஞ்சராக இருக்கும் போதே ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 வரை சம்பாதித்து உள்ளாராம்.வழக்கறிஞ்சராக இருந்த போதே கானா கலை நிகழ்ச்சிகளை நடத்தும் குழுவில் ஒரு தலைமை பொறுப்பில் இருந்துள்ளார்.

- Advertisement -

அந்த நிகழ்ச்சிக்கு வரவு செலவு கணக்கெல்லாம் இவர் தான் பார்ப்பாராம். அப்போது ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் இவருக்கு 50 முதல் 80 ஆயிரம் வரை கிடைக்குமாம். அதன் பின்னர் தான் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்ததாம். ஒரே நேரத்தில் வழக்கறிஞ்சராகவும் பாடகராகவும் இருக்க முடியாது என்பதால் வழக்கறிஞ்சர் தொழிலை விட்டுள்ளார்.

சினிமாவில் இவருக்கு ஒரு படத்திற்கு 1 லட்சம் முதல் சம்பளம் கிடைத்துள்ளது. ஆனால், சம்பாதித்த பணத்தை தான் சேமித்து வைத்தது இல்லை. அவசர செலவுக்கு மட்டும் ஒரு 10 ஆயிரம் வங்கி கணக்கில் இருக்கும். நான் பர்ஸ் கூட பயன்படுத்துவது இல்லை. இப்போது கூட என் பாக்கெட்டில் கர்ச்சீப் மட்டும் தான் இருக்கிறது. பணத்தைவிட நம்பிக்கையும் திறமையும் தான் பெருசு என்று கூறியுள்ளார் பாலா.

-விளம்பரம்-
Advertisement