உயிரின் உயிரே, காதல் வளர்த்தேன் பாடலை பாடிய பாடகர் மேடையிலேயே திடீர் மரணம். மேடையில் பாடிய அவரின் இறுதியான புகைப்படம்.

0
449
kk
- Advertisement -

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத் திடீர் மரணம் அடைந்த சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகராக திகழ்ந்தவர் கிருஷ்ணகுமார் குன்னாத். இவரை எல்லோரும் கேகே என்று தான் அழைப்பார்கள். இவர் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர் இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் பாடியிருந்தார். மேலும், இவர் பின்னணி இசைப் பாடகராகவும் மட்டுமில்லாமல் பாப் மற்றும் ராக் இசை பாடகராக இருந்தவர்.

-விளம்பரம்-

இவர் திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பு 3500 சிற்றிசைகளில் பாடியிருக்கிறார். அதற்கு பின் தான் இவர் திரைத்துறை உலகில் பாட ஆரம்பித்தார். அதுவும் தமிழில் இவர் காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே, அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களை பாடியிருக்கிறார். அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

கிருஷ்ணகுமார் குன்னாத் இசைப்பயணம்:

மேலும், இவருக்கு இந்தியா முழுவதும் எக்கச்சக்க ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் தமிழில் இதுவரை 50க்கு மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் அவருடைய குரல் பிடித்துப்போனதால் காதல் தேசம் படத்தில் கல்லூரி சாலை மற்றும் ஹலோ டாக்டர் பாடல்களையும் பாட வாய்ப்பு தந்தார். இப்படி பல இனிமையான காதல் பாடல்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் கிருஷ்ணகுமார் குன்னாத். மெல்லிசை பாடல்கள் மட்டும் இல்லாமல் பல குத்து பாடல்களையும் இவர் பாடியிருக்கிறார்.

கிருஷ்ணகுமார் குன்னாத் இறப்பு:

அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் வெளிவர உள்ள தி லெஜன்ட் படத்தில் இவர் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். இந்த நிலையில் கொல்கத்தாவில் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடும் போது கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. அதனை அடுத்து அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள சி எம் ஆர் ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருந்தார்கள். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். இருந்தும் அவர் உயிரிழந்து விட்டார். இவருடைய மறைவு இந்திய இசைத்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

பிரதமர் மோடி பதிவு:

மேலும், இவருடைய மறைவுக்குப் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கிருஷ்ணகுமாரின் மறைவிற்கு இரங்கலை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், கே.கேவின் மறைவு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய பாடல்கள் மூலம் அவரை நினைவு கொள்வோம். அவருடைய குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் டீவ்ட்:

பின் லெஜெண்ட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், என்னுடைய உயிரின் உயிரே சென்றுவிட்டது. இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கிருஷ்ணகுமாருக்கு மகன், மகள் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கால். இதில் மகன் பாடகராகவும், மகள் பியானோ இசைக் கலைஞராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement