இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற பின்னணி பாடகராக திகழ்ந்தவர் கிருஷ்ணவேணி ஜிக்கி. இவருடைய முழு பெயர் பில்லவாலு கஜபதி கிருஷ்ணவேணி ஜிக்கி. இவரை அனைவரும் ஜிக்கி என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இவர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் கஜபதி நாயுடு- ராஜகாந்தம்மா. இவர்கள் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆந்திரா பிரதேசத்தின் திருப்பதிக்கு அருகில் உள்ள சந்திரகிரியை சேர்ந்தவர்கள்.

இவர்கள் வாழ்வாதாரத்திற்காக சென்னைக்கு வந்து விட்டார்கள். பின் கிருஷ்ணவேணி ஜிக்கி பிறந்தார். கிருஷ்ணவேணி 1943 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கியிருந்தார். அதற்குப் பிறகு இவர் சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகுதான் இவர் பாடகி ஆனார். இவருடைய இசை திறமையை அறிந்து கொண்டு பலரும் இவருக்கு வாய்ப்பு தந்தார்கள்.

Advertisement

கிருஷ்ணவேணி ஜிக்கி திரைப்பயணம்:

தமிழில் 1948 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அருள் தாரும் தேவா மாதவே ஆதியே இன்ப ஜோதி என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடலுக்கு எஸ் பி வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். அதற்கு பின் பல படங்களில் பாட தொடங்கினார். அதற் பின் இவர் தனது கணவரான ஏ.எம்.ராஜாவைச் சந்தித்தார். பின்னர் 1952 ஆம் ஆண்டு ஏ.எம்.ராஜா தயாரிப்பான திரு.சம்பத் படத்திற்காக ஜிக்கியை பாடவைத்து இருந்தார்.

கிருஷ்ணவேணி ஜிக்கி குடும்பம்:

அதன் பின் ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடி இருந்தார். அப்படியே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் 1958இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார். மேலும், ஜிக்கி அவர்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி போன்ற பல மொழிகளில் பாடியிருக்கிறார்.

Advertisement

கிருஷ்ணவேணி ஜிக்கி பிறந்தநாள்:

கிட்டத்தட்ட பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் இவர் பாடியிருக்கிறார். ஒரு காலத்தில் இவர் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது. பின் இவர் வாய்ப்புகள் குறைந்தவுடன் சினிமாவில் இருந்து விலகி விட்டார். 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி ஜிக்கி உடல்நல குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இன்று ஜிக்கி பிறந்தநாள். இவரின் பிறந்தநாளுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் பதிவாகி வருகிறது.

Advertisement
Advertisement