குடிபோதையில் வாகனம் ஓட்டிய பிரபல இயக்குனரின் மகன்.! மடக்கி பிடித்த போலீஸ்.! நடிகர் மீது வழக்குப் பதிவு

0
429

பிரபல தமிழ் படங்களின் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் குடித்துவிட்டு காரை ஓட்டியதற்காக அவர் ஒட்டி சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு போடப்படட்டுள்ளது .இந்த சம்பவம் தமிழ் சினிமா துறை மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

bharathi raja with son manoj

தமிழ் சினிமாவின் கிராமத்து இயக்குனராக கருதப்படும் பாரதி ராஜாவின் மகன் மனோஜ். 1999 ஆம் பாரதி ராஜா இயக்கிய ‘தாஜ் மஹால்’ படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.தமிழில் முன்னணி நடிகராக வலம் வர முடியாததால் சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மனோஜ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லைட் சாலை வழியாக தனது BMW காரில் சென்றுள்ளார். கார் வேகமாக சென்றதால் அங்கே வாகன சோதனையில் இருந்த போக்குவரத்து காவல் அதிகாரிகள் காரை மறித்துள்ளனர். பின்னர் உள்ளே இருந்த மனோஜிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

Actor-manoj

அப்போது நடிகர் மனோஜ் குடித்திருப்பதை அறிந்த காவல் அதிகாரிகள் அவர் குடித்துள்ளாரா என்று உறுதி செய்ய சுவாச சோதனை மூலம் அவரை சோதித்தனர். பின்னர் அவர் குடித்திருந்தது உறுதியாக அவர் மீது குடி போதையில் வாகனம் ஒட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் ஒட்டி வந்த BMW காரையும் பறிமுதல் செய்த போலீசார், அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி யுள்ளனர்.