‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள்.

மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி நேற்று நடைபெற்றது. டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர்.

Advertisement

மேலும், ரஹ்மானை திட்டியவர்களை விட இந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு மோசமாக ஒருங்கிணைத்த ACTC event என்ற நிறுவனத்தை தான் கடுமையாக சாடி இருந்தனர். அதிலும் உள்ளே இருந்த பணியாளர்கள் சிலர் நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களை தரக்குறைவாக பேசி இருந்தனர். இது தொடர்பாக தனது வருத்தத்தை தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ ஆர் ரஹ்மான் ‘டிக்கெட் நகல்களுடன் மனக்குறைகளையும் சேர்த்து மின்னஞ்சலில் அனுப்புமாறு ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் சிலர் என்னை G.O.A.T னு சொல்வாங்க, இந்த முறை நானே பலி ஆடா இருந்துக்குறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின் பேசிய தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ‘நேற்று மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் ஒரு வாரமாக செய்து கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

Advertisement

அவர்களுக்குப் பார்த்தது 25 ஆயிரம் பேருக்கான நாற்காலிகள் செய்த ஏற்பாடு செய்திருந்தார்கள் ஆனால் வந்தவர்கள் 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் பேர் வந்து இருப்பார்கள். அதிகமானோர் வந்ததற்கான காரணத்தை அறிய வேண்டும் அதன் பின் சிட்டியில் இருந்து வந்தவர்கள் அவர்களது சொந்த வாகனத்தில் வந்தார்கள் அதே போல் இங்கு பணிபுரிந்தவர்களும் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

Advertisement

இது போன்ற தனியார் இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். நிறைய பேர் குழந்தைகள் உடன் வந்து தண்ணீரை சரியில்லை என்றும் கூறியிருந்தனர்‌ மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கான விசாரணைக்காகத் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரோடு ஆலோசனை செய்து வாருங்கள் இது போன்ற நிகழ்வுகளை நடைபெறாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்படும். நேற்று மட்டும் நேற்று முன்தினம் எங்கு மழை இல்லை.

அவர்கள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பல காரணங்களுக்காக வாகனங்களை மக்கள் சாலையில் நிறுத்தியதால் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எதிர்காலங்களில் இது போன்ற இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடம் விசாரணை நடத்திய பின் போதுமான முன்னெச்சரிக்கைக்கான தண்ணீர் வசதி கழிவறை வசதி உணவு வசதி போன்ற பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறினோம். இங்கு போதுமான போலீசார்கள் இருந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படவில்லை என்றும் காவல் ஆணையர் அமல்ராஜ் கூறினார்.

Advertisement