பொள்ளாச்சி காம வெறியகர்ளை கருடபுராணத்தின்படி இப்படியெல்லாம் தான் தண்டிக்க வேண்டும்.!

0
1059
- Advertisement -

பொள்ளாச்சி: பெண்களை பாலியல் சித்ரவதை செய்த கவர்களின் செய்தி தான் இன்று நாடு முழுக்க பேசப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இந்த இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

-விளம்பரம்-

இதில் சபரிராஜன், திருநாவுக்கரசு,சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்று பலரும் கூறிவரும் நிலையில் இவர்களுக்கு கருடபுராணத்தின்படி என்ன தண்டனை என்பதை பாப்போம்.

இதையும் படியுங்க : கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீடியோவில் இரண்டாம் இடம் பிடித்த பொள்ளாச்சி வீடியோ இதான்.! 

- Advertisement -

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரெளரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

-விளம்பரம்-

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

சான்மலி: நன்மை, தீமை, பாவம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

மேலே உள்ள அத்தனை தவறுகளையும் இந்த கயவர்வகள் செய்துள்ளனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்.!

Advertisement