தமிழ் சினிமா வரலாற்றில் ஹீரோக்களுக்கு கூட கிடைக்காத பெருமை, ஜோதிகாவிற்கு கிடைத்துள்ளது.

0
12642
Jyothika
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. 1998-ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘தோழி சஜா கே ரக்னா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக அக்ஷய் கண்ணா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இது தான் ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ஹிந்தி திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ஜோதிகா, அடுத்ததாக தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார்.

-விளம்பரம்-

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்த ‘வாலி’ என்ற தமிழ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஜோதிகா. அதன் பிறகு ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, பூவெல்லாம் உன் வாசம், 12B, தூள், காக்க காக்க, திருமலை, மன்மதன், சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு, சில்லுனு ஒரு காதல்’ போன்ற பல தமிழ் படங்களில் ஹீரோயினாகவே நடித்தார் ஜோதிகா.

- Advertisement -

2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. திருமணத்துக்கு பிறகும் ’36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி’ ஆகிய படங்களில் நடித்தார் ஜோதிகா. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Image

இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஜோதிகா நடித்திருக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தொடர்பான தகவல் ஒன்று வெளி வந்திருக்கிறது.

-விளம்பரம்-

ஜே.ஜே.ப்ரட்ரிக் என்பவர் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.4 1/2 கோடியாம். தற்போது, இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’ ரூ.9 கோடிக்கு கைப்பற்றியிருக்கிறது. விரைவில் இப்படம் ‘அமேசான் ப்ரைம்’-யில் வெளி வரப்போகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement