பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஊமை ராணி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

Advertisement

பொன்னியின் செல்வன் படம் :

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பலரும் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் வெளியீட்டு அரங்கில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சிம்பு, இயக்குனர் பாரதிராஜா, கமலஹாசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த படம் வெளியாக வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

ஊமை ராணி குறித்த தகவல்:

தற்போது இந்த படத்தின் விளம்பரப் பணியில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் கிளைமேக்ஸ் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பொன்னியின் செல்வன் முதன் பாகத்தின் இறுதியில் அருள் மொழியை நந்தினியை போல ஒரு வயதான தோற்றத்தில் இருக்கும் ஒரு பெண் காப்பாற்றுவார். அந்தப் பெண் தான் ஊமை ராணி. அவர் பெயர் மந்தாகினி தேவி. சோழப்பேரரசை ஆட்டி படைக்கும் நந்தினியின் தாயார் தான் மந்தாகினி.

Advertisement

ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம்:

தன்னுடைய இளம் வயதில் அருள்மொழிவர்மனின் தந்தையான சுந்தர சோழரும் மந்தாகினி தேவியும் காதலிப்பார்கள். ஆனால், சோழ நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சுந்தர சோழர் இருப்பார். இதனால் மந்தாகினியை பிரிந்து வானவன் தேவியை சுந்தர சோழர் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்த மந்தாகினி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அவரை வீரபாண்டியன் தான் காப்பாற்றி இலங்கைக்கு அழைத்து செல்கிறார். பின் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பிறந்தவர் தான் நந்தினி மற்றும் மதுராந்தகர். நந்தினியும் மந்தாகினியும் ஒரே உருவத்தில் இருக்க இதுதான் காரணம்.

Advertisement