ராஜராஜசோழன் இந்துவா ? – வெற்றிமாறன் பேச்சுக்கு கல்கியின் பேத்தி பளிச் பதில். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
612
- Advertisement -

ராஜராஜ சோழன் இந்துவா? என்று எழும் சர்ச்சைக்கு கல்கியின் பேத்தி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் எப்போதும் வித்யாசமான படங்களை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தான் படம் வெளியாகி இருந்தது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதோடு படம் வெளியாகி மூன்றே நாட்களில் 200 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

- Advertisement -

வெற்றிமாறன் சொன்னது:

இது ஒரு பக்கம் இருக்க, பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்தே ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும், அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை அவருடைய கட்சியினர் கொண்டாடி இருந்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருந்தார்.

ராஜராஜ சோழன் சர்ச்சை:

அப்போது பேசிய அவர் ‘சினிமா என்பது வெகுமக்களை கூட எளிதில் சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம். திராவிடம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறைய பேசினார்கள். மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

கல்கி பேத்தி அளித்த பேட்டி:

இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்று பேசி இருந்தார். வெற்றிமாறனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தற்போது விவாதம் ஆகியிருக்கிறது. இதுகுறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜராஜ சோழன் இந்துவா? என்ற சர்ச்சைக்கு கல்கியின் பேத்தி பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், அந்த காலத்தில் இந்து மதம் என்ற வார்த்தையே கிடையாது.

ராஜராஜ சோழன் குறித்து சொன்னது:

எந்த கடவுளை யார் தொழுதால் என்ன? நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். அதோடு மத சார்பு இல்லாமல் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அவர்களுடைய கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு. அவர் இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்தவனா? பெயர் தெரியாத வேறு எந்த மதத்தவரா என்று தெரியாது. அப்படி சரித்திர பூர்வமாக நிரூபித்தால் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் தான். ஆனால், இதை சர்ச்சைக்காக காரணமில்லாமல் அரசியலுக்காக புரளியை கிளப்பி விடுவது அசட்டுத்தனமாக இருக்கிறது. இதை கண்டுகொள்ளாமல் விட்டாலே பிரச்சினை முடிந்து விடும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement