பொன்னியின் செல்வன் போஸ்டர் பஞ்சாயத்து. படக்குழு செய்த திடீர் மாற்றம் – ரஜினியின் கட்டளையால் நிகழ்ந்ததா ?

0
376
rajini
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா போஸ்டர்களில் இடம்பெற்ற ரஜினி மற்றும் கமலின் பெயர்கள் பெரிய பஞ்சாயத்தை உண்டாகி இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக விரும்பும் தமிழ் நடிகரும் கமல்ஹாசனால் அல்லது ரஜினிகாந்தால் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். இருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மைல்கற்களை எட்டினர்.

-விளம்பரம்-

மேலும், இந்த இரண்டு மாபெரும் நடிகர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை இன்றும் கூட மகத்தான ஒன்றாக இருந்து வருகிறது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியதால் இருவரும் ஒன்றாக திரை இடத்தைப் பகிரத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை சிறந்த நண்பர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இருவரின் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்றாக தான் இருக்கிறது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் போஸ்டர் குறித்த சர்ச்சை:

அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் டிரைலர் வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, சில தினங்களுக்கு முன்பு தான் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இருந்தது. அதில், கமலின் பெயர் முதல் இடத்திலும், ரஜினியின் பெயர் இரண்டாம் இடத்திலும் இடம்பெற்று இருந்தது. லைக்கா நிறுவனம் ரஜினி- கமல் இதுவரையும் வைத்து படம் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொந்தளிப்பில் ரஜினி ரசிகர்கள்:

இந்நிலையில் இந்த போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து போய் எப்படி ரஜினியின் பெயரை இரண்டாம் இடத்தில் போடலாம். எப்போதுமே தலைவர் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ரஜினி இந்த விழாவிற்கே செல்லக்கூடாது என்றெல்லாம் கொந்தளித்து ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் போயஸ் கார்டனில் ரஜினி இடம் இதுகுறித்து கோரிக்கையும் வைத்திருந்தார்கள். இதனை அடுத்து தற்போது வெளியிடப்பட்ட போஸ்டரில் ரஜினியின் பெயர் முதலிலும், கமலின் பெயர் இரண்டாம் இடத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

லைகாவிடம் சண்டை போட்ட ரஜினி:

இந்நிலையில் இது தொடர்பாக திரை உலகினர் தரப்பில் கூறியிருப்பது, ரசிகர்கள் போயஸ் கார்டனில் ரஜினியிடம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து ரஜினி அவர்கள் லைக்கா நிறுவனத்திடம் சண்டை போட்டு இருக்கிறார். அதற்குப் பிறகு தான் லைக்கா நிறுவனம் ரஜினி பெயரை முதல் இடத்திலும் கமலின் பெயர் இரண்டாம் இடத்திலும் பதிவிட்டு போஸ்டரை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

பொன்னியின் செல்வன் படம்:

மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’ தற்போது திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது.

Advertisement