விஜய் அரசியல் பேச்சு.! புறம்போக்கு அல்ல..! விஜய்க்கு கோரிக்கை.! பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்.!

0
259
vijay

இளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sarkar

இந்த விழாவில் பேசிய விஜய்,தமிழ் நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றும், நான் முதலமைச்சராக வந்தால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்றும் ஒரு வேலை நான் முதல்வராக வந்தால் முதல் வேலையாக ஊழலை ஒழிப்பேன் என்றும் பேசி இருந்தார்.

நடிகர் விஜய் பேசியதை வைத்து பார்க்கும் போது அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் முடிவே செய்து விட்டனர். மேலும், நடிகர் விஜயின் பேச்சுக்கும் பல்வேறு அரசியல் கட்சினரும் தங்களுது விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில் விஜய் பேசியது குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ண் பதிலளித்துள்ளார்.

Actor-vijay

சமீபத்தில் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணனிடம், நடிகர் விஜய், தான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாரே? என்று கேட்கப்பட்டதற்கு, அந்த பதவியில் இருந்து யாராவது நடிப்பார்களா,எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகவும், ஜெயலலிதா ஆகவும் முடியாது. இன்று மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினி மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய பொன்.ராதாகிருஷ்ண், தமிழகம் புறம்போக்கு நிலம் போல் நாதியில்லாமல் கிடப்பது போன்று சிந்தனையுடன் உள்ளே வரக்கூடாது. இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், லஞ்சம் வாங்குபவர்கள் யார் என்று குறிப்பிட்டு காட்டவேண்டும். அவ்வாறு கூறினால் நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவிப்பேன் என்று கூறியுள்ளார்.