இந்த படத்தில் விஜய்யோட கேரக்ட்டர் இதான் அதனால தான் ‘பீஸ்ட்’ – இப்போதே ரகசியத்தை உடைத்த பூஜா ஹேக்டே.

0
358
Beast
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

-விளம்பரம்-
beast

மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் தான் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்திய உளவுத்துறையில் விஜய் பணிபுரிந்து வருகிறார். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். அப்போது அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. கடத்தப்பட்ட மாலில் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து அவரிடம் மால்லையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார்.

பீஸ்ட் கதை :

இந்த கடத்தலில் விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது.இந்த படத்தில் வீர ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் விஜய். மேலும், இந்த படத்திற்கு பீஸ்ட் என்று டைட்டிலை வைத்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது.

-விளம்பரம்-

‘பீஸ்ட்’ அர்த்தம் சொன்ன பூஜா :

அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். ஆனால், இந்த படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைத்ததரற்கு காரணத்தை கூறி இருக்கிறார் பூஜா ஹெக்டே. இதுகுறித்து பேசியுள்ள அவர், விஜய் இந்த படத்தில் அமைதியாகவே இருப்பார், திடீரென அவருக்கு உள்ளே இருக்கும் பீஸ்ட் வெளியில் வரும். 10 செகண்ட் முன்பு அவர் இப்படி இல்லையே என எல்லோருக்கும் தோன்றும். அப்படி ஒரு கதாபாத்திரம். அதனால் தான் பீஸ்ட் என பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

படம் முழுதும் ஒரே காஸ்டியூம் :

மேலும், இந்த படம் பெரும்பாலும் ஷாப்பிங் மாலில் நாடாகும் கதை என்றும், இந்த படத்தில் விஜய் ஒரே காஸ்டியூமில் தான் நடித்துள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து பேசிய பூஜா ஹெக்டே ‘இந்த படத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தான் உட்பட பல நடிகர்களும் ஒரே காஸ்டியூமில் தான் நடித்தோம் ஆனால் நெல்சன் மற்றும் தினம் தினம் வேறு வேறு உடையில் வருவார் உண்மையான பீஸ்ட் ரேஷன் தான் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement