செல்ஃபீ எடுக்க வந்த ரசிகர் செய்த காரியம், முகம் சுழித்த பீஸ்ட் நாயகி – வைரலாகும் வீடியோ.

0
684
Pooja Hegde
- Advertisement -

பொது இடத்தில் பூஜா ஹெக்டே உடன் போட்டோ எடுக்கச் சென்ற ரசிகர் செய்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படம் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

-விளம்பரம்-
pooja

அதற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் தெலுங்கு திரையுலகிற்கு ஜம் பண்ணி விட்டார். பின் இவர் 2014-ஆம் ஆண்டு நடித்த ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், இறுதியாக இவர் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற படம் மெகா ஹிட்டானது.

இதையும் பாருங்க : வருடத்திற்கு ஒரு சொகுசு கார் – மகன் பிறந்த கையோடு அடுத்த காரை வாங்கிய சஞ்சீவ் – ஆல்யா ஜோடி.

- Advertisement -

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

தற்போது இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தான் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது.

பீஸ்ட் படத்தின் பாடல்கள்:

அதிலும் அரபிக்குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பீஸ்ட் படத்தின் பாடல், டான்ஸ் மூலமாகவே பூஜா ஹெக்டே பயங்கர பாப்புலராகி விட்டார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

பூஜா நடித்த ராதே ஷ்யாம்:

இதற்கிடையில் பூஜா அவர்கள் பிரபாஸ் உடன் சேர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் பூஜா ஹெக்டே பிட்னஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே விடம் ரசிகர் செய்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பூஜா ஹெக்டே வீடியோ:

அது என்னவென்றால், பூஜா அவர்கள் நேற்று pilates முடித்து விட்டு வெளியில் வரும்போது ரசிகர் ஒருவர் பூஜா விடம் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கு பூஜாவும் ஓகே என சொல்லி போஸ் கொடுத்திருந்தார். செல்பி எடுத்த பின்பு அந்த நபர் விடாமல் பூஜாவிடம் மீண்டும் செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டு தொல்லை செய்திருக்கிறார். உடனே அங்கிருந்த வீடியோ, போட்டோ கிராபர்கள் எல்லோரும் அந்த நபரை திட்டி வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த நபர் கிளம்பி சென்று இருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement