விஜய்க்கு ஜோடியாக நடிக்க காத்துகொண்டு இருக்கிறேன் – லேட்டஸ்ட் சென்சேஷனில் நடிகை ஓபன் டாலக். வைரல் வீடியோ.

0
938
vijay 65
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டு இருந்தனர். இந்த படத்தை இயக்க இருக்கும் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர்.

- Advertisement -

அதுபோக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தை பற்றிய முதல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதே போல இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதில் ராஷ்மிகா மற்றும் பூஜா ஹேகடே்வின் பெயர்கள் அதிகமாக அடிபட்டது.

இவர்கள் இருவர் பெயரும் மாஸ்டர் படத்தின் போதே விஜய்க்கு ஜோடி போடும் லிஸ்டில் அடிபட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக இவர்கள் இருவருடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, “மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அது நடந்தால் மகிழ்ச்சி. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement