‘தளபதி 65’ பூஜைக்கு வராததர்க்கான காரணத்தை சொன்ன பூஜா ஹேக்டே – கழுவி ஊற்றிய தளபதி ரசிகர்கள்.

0
6697
pooja
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

இதையும் பாருங்க : தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட chef தாமு – அப்படியே தாமு மாதிரியே இருக்காங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (மார்ச் 31) துவங்கி இருக்கிறது. அந்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த பூஜைக்கு படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே வரவில்லை. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நான் வேறு ஒரு இடத்தில் ஷூட்டிங்கில் இருப்பதால் தளபதி 65 படத்தின் முகுர்த பூஜையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், என்னுடைய மனமும் எண்ணமும் படக்குழுவுடன் தான் இருக்கும். விரைவில் கலந்துகொள்ள காத்துகொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பூஜா ஹேக்டே திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு கூட வர வேண்டாம் நல்லா இருக்கும், நீங்க என்ன நயன்தாராவா என்றெல்லாம் திட்டி தீர்த்து வருகின்றனர். தமிழ் தற்போது பூஜா ஹேக்டே தெலுங்கில் இரண்டு படத்திலும் இந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement