கமலின் குடும்ப புகைப்படத்தில் இவர் ஏன் இருக்கிறார். குழம்பும் ரசிகர்கள்.

0
19498
pooja-kumari
- Advertisement -

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடிகை பூஜா குமாருடன் குடும்ப போட்டோ எடுத்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், நடிகர் கமலஹாசன்,நடிகை பூஜா குமர் குறித்தும் பல கேள்விகள் இணையங்களில் எழுந்து வந்துள்ளன. உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் ஏற்கனவே நான்கு பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. தற்போது அவருடைய 65 வயதில் நடிகை பூஜா குமாருடன தொடர்பில் உள்ளார் என்ற தகவல் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை பூஜா குமார் ஒரு இந்தோ- அமெரிக்க நடிகை ஆவார். இவர் தமிழில் 1997 ஆம் ஆண்டு கே.ஆர் இன் திரைப்படமான ‘காதல் ரோஜாவே’ படத்தில் அறிமுகமானார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

-விளம்பரம்-

அதற்குப் பின்னர் அவர் தமிழ் திரையுலகிற்கு வரவே இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் இவர் கமலஹாசனுடன் நெருங்கி பழகி வருவதாக பல விமர்சனங்கள் வந்துள்ளன. அதுவும் சமீபத்தில் இருவரும் சிங்கப்பூர் நாட்டில் தெருக்களில் சுற்றி, சுற்றி போட்டோக்களை எடுத்தும், தங்களுடைய சுற்றுலா பயணத்தை சிறப்பாக கொண்டாடி வந்தார்கள் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்காக கமலஹாசன் சென்றுள்ளார். ஆனால், சிங்கப்பூருக்கு நடிகை பூஜா குமாரும் சென்றுள்ளார். அவருக்கு அங்கு என்ன வேலை? என பல கேள்விகளை எழுப்பினார்கள்.

இதையும் பாருங்க : யாருக்கு வயசாகுது. ரௌடி பேபி பாடலுக்கு இப்படி ஒரு ஆடையில் ஆட்டம் போட்ட கிரண்.

- Advertisement -

இந்நிலையில் தான் பரமக்குடியில் தனது தந்தை திறப்பு விழாவிற்கு கமலஹாசன் அவர்கள் தன் குடும்பத்தோடு சென்று இருந்தார். இதனைத் தொடர்ந்து பரமக்குடியில் கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவருடைய சகோதரர் சாருஹாசன், மருமகள் சுகாசினி மணிரத்தினம், மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அங்கேயும் பூஜா தன்னுடைய தாயாருடன் வந்திருந்தார். மேலும் அவர்கள் ஒன்றாக இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
கமல்ஹாசன் குடும்பத்தோடு நடிகை பூஜா குமாருக்கு என்ன? வேலை எனவும், அதுவும் நடிகை பூஜா குமார் தன்னுடைய அம்மாவோடு இந்த விழாவில் கலந்து கொண்டார் என்ற தகவலும் வந்துள்ளது. இதை பார்த்த பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கமலஹாசன் அவர்கள் வாணி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விட்டும் பிரிந்தார். அதன் பிறகு நடிகை கவுதமியை தன்னுடைய வீட்டிலேயே வைத்து ஒன்றாக இரண்டு பேரும் வாழ்ந்து வந்தார்கள். இது வெட்ட வெளிச்சமான ஊர் தெரிந்த விஷயம். பின் கமலஹாசன் அவரை விட்டும் பிரிந்தார். இந்த நிலையில் தற்போது பூஜா குமாருடன் கமலஹாசன் அவர்கள் நெருக்கமாக இருக்கிறார் என பல தகவல்கள் இணையங்களில் வந்த வண்ணம் உள்ளது. ஆனால், 65 வயதில் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது விட்டுட்டு அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என தெரிந்ததும் ரசிகர்கள் மிக வருத்தத்தில் உள்ளனர். மேலும், இது நாகரீகமும் இல்லை என்ற கருத்தையும் வெளிப்படையாக போட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூஜா குமாரை திருமணம் செய்து கொண்டாரா? என பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement