தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மாரி 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ என்ற பாடல் இந்தியா முழுவதும் பெரும் வைரலானது. யூடியூபில் மட்டும் 200 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு இந்த பாடல் மாபெரும் சாதனையை படைத்தது. இந்த பாடலை பலரும் டிக் டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டது தான் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ரவுடி பேபி பாடலுக்கு பேபி உடையில் மிகவும் கவர்ச்சியான ஆட்டம் போட்டு பிரபல நடிகையான கிரண் ரத்தோட் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான். அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.
இதையும் பாருங்க : என் உள்ளாடையை மூந்து பாருங்க என்னை பிடிக்கும். ஸ்ரீரெட்டி பதிவிட்ட சர்ச்சையான பதிவு.
ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார். இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். அதற்கு பின்னர் அம்மணியை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியவில்லை.
இருப்பினும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை கிரண். 38 வயது ஆனாலும் கவர்ச்சியில் சற்றும் குறையாத அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் ரவுடி பேபி பாடலுக்கு நடிகை கிரண் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து நடன அசைவுகளை செய்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது.