குடும்ப கஷ்டம், கணவன் மனைவி புரிதல், கூட்டுகுடும்பம், சினிமா ரீ என்ட்ரி – பூர்ணிமா பாக்யராஜ் எஸ்க்குளுசிவ்

0
127
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் பூர்ணிமா பாக்கியராஜ். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருடைய கணவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தான். இவர் பாக்கியராஜ் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படங்களில் நடித்ததன் மூலம் தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

-விளம்பரம்-

இருவரும் கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் மகன் சாந்தனு தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு பூர்ணிமா பாக்யராஜ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். பின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து பூர்ணிமா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பூர்ணிமா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பூர்ணிமா பாக்யராஜ், சினிமாவில் நான் ரொம்ப நாட்கள் நடிக்காமல் இருந்தது எனக்கு வருத்தமாக தான் இருந்தது. அந்த நேரத்தில் நான் நினைத்தது செய்தது
தான் சரி என்று நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் குடும்பமும் சினிமாவும் வெற்றிகரமாக எடுத்துக் கொண்டு போக ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் சினிமாவை விட்டு விலகி விட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வரும்போது ஜெனரேஷன் கேப் ஆகிவிட்டது.

குடும்பம் சூழ்நிலை:

இருந்தாலுமே நான் மீண்டும் நடிப்பது ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அதேபோல் எங்களுக்கு கஷ்டம் வரலை என்று நினைக்கிறார்கள். எங்களுக்கு வந்த கஷ்டம் மாதிரி யாருக்குமே வரக்கூடாது என்று நான் நினைக்கிறேன். காரணம், இந்த சினிமாத்துறை அப்படி. அந்த அளவுக்கு நாங்கள் கஷ்டப்பட்டு இருக்கிறோம். நாங்கள் எல்லோருமே ஒரு குடும்பமாக இதை கடக்க வேண்டும் என்று தான் நினைத்தோம். கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை நாம் ஒன்றாக இருக்கிறோம்.

-விளம்பரம்-

கூட்டு குடும்பம்:

அதனால் தான் எங்களுடைய பிரச்சனைகளை தீர்த்தோம். நியூக்ளியர் ஃபேமிலி தான் ரொம்ப நல்லது. கல்யாணத்துக்கு முன்னாடி நான் நியூக்ளியர் ஃபேமிலி தான். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு கூட்டுக்குடும்பமாக மாறினேன். கல்யாணம் ஆன புதிதில் பெரியவர்கள் கூட இருந்தார்கள் என்றால் சின்ன சின்ன விஷயத்தை எப்படி கையாளுவது என்று தெரியாது. ஆனால், நியூக்ளியர் ஃபேமிலியில் இருக்கும் போது கொஞ்சம் தனிமையாக இருந்தால் நல்லா இருக்கும் என்று தோணும்.

கணவன்-மனைவி புரிதல்:

அதேபோல் கணவன் மனைவியிடையே புரிதல் வருவதற்கு இடையில் பெரியவர்கள் இருக்க வேண்டும். சின்ன குழந்தைகளை விட வளர்ந்த குழந்தைகளுக்கு புத்தி சொல்வதும் பெரியவங்க குடும்பத்தில் இருப்பது ரொம்ப முக்கியம். எல்லா திருமண வாழ்க்கையிலும் விட்டுக் கொடுத்து போகணும். எப்பவும் நாம்தான் ஜெயிக்கணும் என்றால் அது கல்யாணம் பண்ணிக்காமே இருக்கலாம். கல்யாண வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சில நேரம் நாம் தோற்கவும் செய்யணும். சந்தோஷம், கஷ்டமான நாட்களும் இருக்கும். இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement