‘திருமணத்திற்கு முன் நடந்த கடைசி படப்பிடிப்பில்’ புகைப்படத்துடன் பூர்ணிமா பகிர்ந்த சுவாரசிய தகவல்.

0
1293
bhagyaraj
- Advertisement -

திருமணத்திற்கு முன்பு நடந்த கடைசி படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பூர்ணிமா பாக்யராஜ் தற்போது சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் பூர்ணிமா பாக்கியராஜ். இவர் 70, 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருடைய கணவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தான்.
இவர் பாக்கியராஜ் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் படங்களில் நடித்ததன் மூலம் தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்று சொல்லலாம். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருந்தவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற ஆண்டு மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை படங்களை எடுப்பதில் பாக்கியராஜ் கைதேர்ந்தவர். இதை தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார்.

- Advertisement -

பாக்கியராஜ் – பூர்ணிமா திருமணம்:

இறுதியாக தன் மகனை வைத்து ‘சித்து +2’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் இவர் படத்தை இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் நடிகை பூர்ணிமாவை காதலித்து கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் மகன் சாந்தனு தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பாக்யராஜ் பிரவீனா என்பவரை 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பூர்ணிமா நடித்த படங்கள்:

இருப்பினும் திருமணமான இரண்டே வருடத்தில் நடிகை பிரவீணாவிற்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு உயிரிழந்தார். அதற்கு பிறகு தான் ஒரே வருடத்தில் பாக்கியராஜ் பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் பாக்கியராஜ்- பூர்ணிமா தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த தம்பதிகளாக விளங்கி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு பூர்ணிமா பாக்யராஜ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். பின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து பூர்ணிமா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பூர்ணிமா நடிக்கும் சீரியல்கள்:

அதோடு சின்னத்திரை சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் எங்க வீட்டு மீனாட்சி என்ற தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக பூர்ணிமா நடித்து வருகிறார். இது ஒரு பக்கமிருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய குடும்ப புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது பூர்ணிமா பாக்யராஜ் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவர் பாக்யராஜுடன் மாலை அணிந்து இருக்கும்படியான பழைய புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

பூர்ணிமா பதிவிட்ட புகைப்படம்:

அதில் நடிகர் பிரபு, விஜயகுமார், சாருஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் இருக்கிறார்கள். மேலும், இந்த புகைப்படத்தை பதிவிட்டு பூர்ணிமா கூறியிருப்பது, இந்த புகைப்படம் கடந்த 38 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதாவது எங்கள் திருமணத்துக்கு முன் நான் கடைசியாக நடித்த படம் எங்க வீட்டுப் பிள்ளை. இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பின் போது நடிகர் பிரபு, ஒய்ஜி மகேந்திரன், விஜயகுமார், சாரு ஹாசன் உட்பட பலரும் கலந்து இருந்தார்கள். இது பிப்ரவரி 4 1984 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பூர்ணிமா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement