பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய ஹீரோ – அவருக்கு பதில் களமிறங்க இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.

0
5053
arun
- Advertisement -

பூவே உனக்காக தொடரில் இருந்து விலகியதாக அந்த சீரியலின் நாயகன் அருண் தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியை போல சன் தொலைக்காட்சியிலும் சினிமா டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வானத்தை போல. பூவே உனக்காக, ரோஜா என்று சினிமா டைட்டிலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் சன் டிவியின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக 250 எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலின் நாயகனாக நடித்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் அவருக்கு பதிலாக விஜய் டிவியில் பல சிரியல்களில் நடித்த அஸீம் கமிட் ஆகி இருக்கிறார்.

இதையும் பாருங்க : முன்ன சமந்தா, இப்போ அனுபமாவா – தன்னை தானே குயூட் என்று புகழ்ந்து அனுபமாவுடன் ஒப்பிட்ட பவித்ரா. இதான் அந்த போஸ்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற தொடர்களில் நடித்தவர் அசீம். ஆனால், விஜய் தொலைகாட்சிக்கு வருவதர்க்கு முன்பாகவே இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் vjவாக பணியாற்றினார். அதன் பின்னர் சன் டிவியில் விகடன் தயாரித்த ஹிட் சீரியலான ‘பிரியமானவள்’ தொடரில் நடித்தார். அதன் பின்னர் தான் விஜய்டிவிக்கு வந்தார்.

விஜய் டிவி சீரியலில் நடித்த போது இவருக்கும் ஷிவானிக்கும் காதல் மலர்ந்ததாக சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் இவர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்வதாக இருந்த நிலையில் இவர் உள்ளே சென்றால் ஷிவானி பிரச்சனை வரும் என்று அவரது அம்மா விஜய் டிவியை கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. பின்னர் இவர் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸும் தள்ளிப்போனதால் இனி விஜய் டிவியை நம்பினால் வேளைக்கு ஆகாது என்று மீண்டும் தனது தாய் வீடான சன் டிவிகே வந்துவிட்டார் அசீம். பூவே உனக்காக தொடரில் நாளை (7/6/21) முதல் ஹீரோவாக களம் இறங்குகிறார் அஸீம். அஸீம் எண்ட்ரியாகும் காட்சிகள் கடந்த இரு தினங்களாக ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

Advertisement