முன்ன சமந்தா, இப்போ அனுபமாவா – தன்னை தானே குயூட் என்று புகழ்ந்து அனுபமாவுடன் ஒப்பிட்ட பவித்ரா. இதான் அந்த போஸ்.

0
3704
pavithra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர்.இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். அதில் பவித்ரா லட்சுமியும் ஒருவர்.

-விளம்பரம்-

நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : இளம் நடிகையின் தொடையில் முத்தம் கொடுத்த சூர்யா பட இயக்குனர் – சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடுமா.

- Advertisement -

பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் ஒப்பிட்டு பவித்ரா லட்சுமி புகைப்படம் ஒன்றை பதிவியுள்ளார். அதில் தன்னை தானே குயூட்டாக இருப்பதாகவும் கூறிக் கொண்டுள்ளார். மேலும், இந்த போஸ் அனுபமாவிடம் இருந்து காப்பி அடித்ததாகவும் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தெறி படத்தில் சமந்தா கட்டி வந்த அதே போன்ற புடவையில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இப்படி ஒரு பவித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு ‘நான் உங்களை போலவே இருக்கிறேனா ? ‘ என்று பதிவிட்டு சமந்தா டேக் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சமந்தா , நீங்கள் மிகவும் அழகா இருக்கிறீர்கள் என்று பதில் அளித்துள்ளார்.ஆனால், உண்மையில் இது பவித்ராவின் ட்விட்டர் கண்ணாகிய கிடையாதாம். இது பவித்ரா லட்சுமி பெயரில் இயங்கும் போலி கணக்காம், இருப்பினும் தன்னை பாராட்டிய சமந்தாவிற்கு பவித்ரா இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்தார்.

-விளம்பரம்-
Advertisement