பூவே உனக்காக படத்தில் பணியாற்றியவரையே திருமணம் செய்து கொண்ட சங்கீதா. அட, இவரு சிம்பு பட இயக்குநராச்சே.

0
4210
sangeetha
- Advertisement -

விஜய் நடிப்பில் கடந்த 96 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு மாபெரும் ஒரு திருப்பு முனை படமாக அமைந்தது. விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்த ஏழு படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை ஆனால் இந்த படம் தான் விஜயின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது இந்த படத்தில்தான் விஜய்யை ஒரு முழு நடிகராக மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு படமாக அமைந்திருந்தது. விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கதாநாயகிகளாக அஞ்சு அரவிந்தும் சங்கீதாவும் நடித்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-44.jpg

இதில் நடித்த சங்கீதா 90களில் நல்ல திறமையுடன் நன்றாக நடித்த மலையாள ஹீரோயின்களில் இவரும் ஒருவர். அதன் பின்னர் ஆளே காணாமல் போனவர். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம் தான்.அவருடைய பிஸ்னசுக்காக சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். அப்போது அவருக்கு 1974ஆம் ஆண்டு பிறந்தவர் தான் சங்கீதா. 1978லேயே சிநேகிதம் ஒரு பெண்ணோ என்ற ஒரு மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சங்கீதா. இரத்தத்தின் இரத்தமே என்ற ஒரு தமிழ் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

- Advertisement -

முதன் முதலாக ஹீரோயினாக ‘எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் ராஜ் கிரண் இயக்கத்தில் நடித்தார். ஆனால், அவருக்கு என ஒரு நல்ல பெயரை கொடுத்தது விஜயின் பூவே உனக்காக படம்தான். தனது சுட்டித்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் அப்போது. அதன் பின்னர் பல படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது.அதன் பிறகு சக்கை போடு போட்டு கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தார்.

This image has an empty alt attribute; its file name is sangeetha.jpg

கடையசியாக 2003ல் மேரி ஆல்பர்ட் என்கிற படத்தில் நடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணன் உடன் திருமணம் செய்துகொண்டார். ஒளிப்பதிவாளர் சரவணன் அதே போல் ஒளிப்பதிவாளராக இருந்த சரவணன், சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் இயக்குனராக மாறினார். அதன் பின்னர், எந்த ஒரு படத்திலும் நடிக்காத சங்கீதா தற்போது ஒரு பெண் குழந்தையுடன் வீட்டை கவனித்துக்கொண்டு பொறுப்புடன் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement