பேசாம சேதுகிட்ட போய் எனக்கு விட்டுகொடு மச்சானு கேட்டிருக்கலாம் – மாஸ்டர் பட வாய்ப்பு தவறவிட்டுள்ளது குறித்த பிரபல வில்லன்.

0
12911
vjs
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது. கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரியவந்தது.

-விளம்பரம்-

 

- Advertisement -

மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக வந்துகொண்டு இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருந்ததாக கூறியுள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் கூறியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. யாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

வீடியோவில் 17 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இயக்கத்தில் வெளியான ‘தாரா தப்பட்டை’ விஷால் நடிப்பில் வெளியான ‘மருது’ போன்ற படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர் கே சுரேஷ் ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆர் கே சுரேஷ், மாஸ்டர் படத்துல நான் நான் பவானி ரோல்ல நடிக்கலன்னு வருத்தப்படுறேன். வாழ்க்கைல நான் மிஸ் பண்ண விஷயமா யோசிக்கறது அதான். பேசாம சேதுக்கிட்ட போய் மச்சா இத எனக்கு குடுடானு சொல்லி கேட்டிருக்கலாம்னு தோணுது. நான் லோகேஷ் கிட்டயும் பிரிட்டோ கிட்டயும் பேசிக்கொண்டு தான் இருந்தேன் நடுவுல விட்டுட்டேன் என்று கூறியுள்ளார் ஆர் கே சுரேஷ.

Advertisement