‘தலைக்கனம் அதிகம் ஆயிருச்சோ’ – முழித்த போர் தொழில் இயக்குனர் – சட்டென எழுந்து மன்னிப்பு கேட்டு சர்ச்சையை முடித்து வைத்த சரத்குமார்

0
3408
- Advertisement -

போர் தொழில் படத்தின் வெற்றி விழாவில் பத்திரிகையாளர் கேட்ட கேள்வியால் திகைத்து போன இயக்குனர். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரியாக சரத்குமார் இருக்கிறார். இவர் ரொம்ப டெரரான ஆள். இவருடைய தலைமையின் கீழ் வேலை செய்பவர் தான் அசோக் செல்வன். ஆனால், அசோக் விளையாட்டுப் பிள்ளையாக அதிக புத்திசாலி கொண்ட இளைஞராக இருக்கிறார். இவர் புதிதாக போஸ்டிங் வாங்கி வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் திருச்சியை மையமாக வைத்து ஒரே மாதிரியான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

போர் தொழில் படம்:

இந்த கொலைகளில் எந்தவித தடயங்களும் இல்லாமல் நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு அசோக் செல்வன்- சரத்குமார் இடம் வருகிறது. அசோக் வழக்கை கையில் எடுத்தவுடன் சரத்குமார் கடுமையாக போராடுகிறார். ஆனால், அசோக் செல்வன் விளையாட்டுத்தனமாக கடுப்பேற்றும்படி நடந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் சீரியல் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

படத்தின் கதை:

இன்னொரு பக்கம் போலீசுக்குள் இடையில் பாலிடிக்ஸ் நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி தொடர் கொலைகளை செய்யும் நபர்களை சரத்குமார் -அசோக் செல்வன் இணைந்து கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு பின்னணி என்ன? என்று சொல்வதே படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

படத்தின் வெற்றி விழா :

தமிழ் நாடுமட்டுமல்லாது அக்கடத்து மாநிலத்திலும் இந்த படம் இன்னமும் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர் ஒருவர் ‘உங்க டீமுக்கு தலைக்கனம் அதிகமாகிடிச்சோ என்று இயக்குனரை பார்த்து கேட்டார்’ இதனால் என்ன நடந்தது என்று புரியாமல் இயக்குனர் முழித்தார்.

சர்ச்சையை முடித்த சரத் குமார் :

பின்னர் அந்த பத்திரிகையாளர் ‘உங்கள் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் எங்களை கீழே அமர சொன்னார். நங்கள் பிரெஸ் என்று சொன்னால் கூட இருக்கட்டும் என்று சொல்கிறார். ஒரு படம் தான ஹிட் ஆகி இருக்கு அதுக்குள்ள இப்படி தலைகீழ குதிக்கலாமா என்று பேசிக்கொண்டு இருக்கும் போது சட்டென எழுந்து வந்த சரத்குமார் ‘ஒருவர் செய்த தவறுக்காக நீங்கள் இப்படி அனைவரும் மத்தியிலும் பேசுவதற்கு பதிலாக தனிப்பட்ட முறையில் வந்து பேசி இருக்கலாம். இருந்தாலும் அவர் செய்த செயலுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ‘ என்று கூறி சர்ச்சையை முடித்தார்.

Advertisement