திருமணம் பற்றி எண்ணம் வந்தது. ஆனால் ? அனுஷ்கா காதல் குறித்து மனம் திறந்த பிரபாஸ்.

0
17629
prabhas-anushka
- Advertisement -

சினிமா துறையில் எத்தனையோ காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல சினிமா துறையில் பல்வேறு நட்சத்திரங்கள் காதல் கிசுகிசுவில் அடிக்கடி அடிபட்டு கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் தெலுங்கில் முக்கிய நடிகர்களான அனுஷ்கா மற்றும் பிரபாஸின் காதல் கிசுகிசு சிந்துபாத் கதை போல பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நடிகர், நடிகையான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெலுங்கு வட்டாரத்தில் ஒரு செய்தி பேசப்பட்டு வந்த தான் இருக்கிறது. ஆனால், இருவருமே இதை இன்றுவரை ஒப்புக் கொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அனுஷ்கா போட்ட குத்தாட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது.அதே போல அந்த சமயத்தில் ஒரு வீடியோ ஒன்று கூட வெளியாகி இருந்தன. அதில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் மேடையில் ஒரு ஓரமாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாக காதல் இல்லாமலா இப்படி தனியாக கொஞ்சி குலாவுகிறார்கள் என்று ரசிகர்கள்கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையும் பாருங்க : நாயகி சீரியல் நடிகையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார். மேலும், நிஜத்தில் இவர் யார் தெரியுமா ?

- Advertisement -

அதே பல கடந்த சில வருடங்களாகவே அனுஷ்கா மற்றும் பிரபாஸ் காதலில் இருந்து வருவதாக சில கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் ஒரு இசை வெளியிட்டு விழாவின் போது பேசிய அனுஷ்கா, நானும் பிரபாஸும் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் காதல் இல்லை என்று தெளிவுபடுத்தினார். இதையே தான் பிரபாஸும் கூறிவந்தார். இதன் பின்னர் பாகுபாலி படத்தின் முதல் பாகம் வந்தவுடம் பிரபாசுக்கு 6000 திருமணம் வரன்கள் வந்தது என நடிகர் பிரபாஸ் முன்னர் கூறி இருக்கிறார்.

Image result for anushka prabhas"

இந்நிலையில் பிரபாஸுக்கு எப்போது திருமணம் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள்கூட சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலானது. இந்த நிலையில் இந்த கேள்விக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் பிரபாஸ்சின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், எங்களைப் பற்றிய வதந்திகள் எப்போதும் வந்து கொண்டுதான் இருக்கிறது.கொஞ்சம் நாளாக அந்த வதந்தி இல்லாமல் இருந்தது தற்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்.

-விளம்பரம்-

நானும் அனுஷ்காவும் ஒன்றாக பல படங்களில் பணியாற்றியுள்ளோம். எங்கள் இருவருக்கும் 11 ஆண்டுகால நட்பு இருக்கிறது. ஆனால், நாங்கள் இருவரும் காதலிப்பதாக பலரும் கூறி வருகிறார்கள் .அப்படி ஒருவேளை எங்களுக்குள் காதல் இருந்தால் அதனை நாங்கள் மறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் எங்கள் இருவரில் யாராவது ஒருவருக்கு திருமணம் ஆகும் வரை அந்த பேச்சு கண்டிப்பாக நிற்கப் போவது இல்லை. என்னைப் பொறுத்தவரை அனுஷ்கா எனது ஒரு நல்ல தோழி. அவரையும் என்னையும் திரையில் இருக்கும் ஒரு ஜோடி போலத்தான் நிஜ வாழ்விலும் மக்கள் பார்க்கிறார்கள். எங்கள் இருவருக்கும் மத்தியில் உறவு இருக்கிறது என்ற வதந்தியை எப்படி நிறுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. நான் கண்டிப்பாக, நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். சமீபத்தில் கூட திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், அப்போது படங்களில் கொஞ்சம் பிசியாக இருந்ததினால் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், வெற்றியும் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபாத் கூறியுள்ளார்.

Advertisement