நாயகி சீரியல் நடிகையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார். மேலும், நிஜத்தில் இவர் யார் தெரியுமா ?

0
141764
Nayagi-Serial-anandhi
- Advertisement -

சின்னத்திரை, தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகர் நடிகைகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது. சந்தானம், சிவகார்த்திகேயன் தொடங்கி பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் வரை சின்னத்திரையில் இருந்து வந்த பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அதே போல ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து வந்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் வந்த கதைகளையும் நாம் அறிவோம். அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்’ நாயகி ‘என்ற தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யா பிரதீப்பும் திரைப்படத்திலிருந்து சீரியல் பக்கம் வந்தவர்தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is Vidya-Pradeep-.jp_-683x1024.jpg

கேரளாவை பூர்வீகமாக கொண்ட வித்யா பிரதீப் ஒரு சயின்டிஸ்ட் என்றால் நம்ப முடியுமா ஆமாங்க பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தவர் தான் வித்யா பிரதீப். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த வித்யா சென்னையில் உள்ள ஒரு பிரபல கண் மருத்துவமனை கல்லூரியில் பிஎச்டி பட்டத்தையும் முடித்திருக்கிறார். மேலும் ,தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பிரபலமடைந்து வரும் ஸ்டெம் செல் உயிரியல் ஆராய்ச்சி குழுவின் பணிபுரிந்து வருகிறார் வித்யா. மேலும், வித்யாவின் பணி சர்வதேச ஜெர்னல் ஆப் செல் தெரபி என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

இதையும் பாருங்க : கௌண்டமணியுடன் சூரி நடித்த காட்சியை பார்த்துள்ளீர்களா. இது தான் சூரி பேசிய முதல் வசனமாம்.

- Advertisement -

மருத்துவத்துறையில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா நடிப்பில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத்தான் சீரியலில் நடிக்கத் துவங்கினார். ஆரம்பத்தில் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பர மாடலாக நடித்து வந்தார் வித்யா. மேலும், இவரை தமிழில் முதன்முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் ஏ எல் விஜய் தான். இவரது இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘சைவம்’ படத்தில் வித்யா, தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்திருந்தார். அதன்பின்னர் பசங்க2, ஒண்ணுமே புரியல அச்சமின்றி போன்ற பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வித்யா.

Image result for vidya pradeep hot"
This image has an empty alt attribute; its file name is image-22.png

ஆரம்பத்தில் நாயகி சீரியலில் பாஸ் சீசன் 2 போட்டியாளரும் நடிகையுமான விஜயலக்ஷ்மி தான் நடித்து வந்தார். ஆனால், விஜயலட்சுமி ஒரு சில காரணத்தினால் நாயகி சீரியலில் இருந்து விலகவே அவருக்கு பதிலாக வித்யா நாயகி தொடரில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். மேலும், லட்சுமியை விட ஆனந்தி கதாபாத்திரத்திற்கு வித்தியா மிகவும் பொருந்திப் போயுள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். மேலும், தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நாயகி சீரியலும் குடும்ப ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஆனந்தி ஆக நடித்து வரும் வித்யா தான்.

-விளம்பரம்-

நாயகி தொடரில் நடித்து வந்தாலும் அவ்வப்போது சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் தலை காண்பித்து வருகிறார் வித்யா. சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் படத்திலும் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறையவே தற்போது சீரியல் பக்கம் திரும்பியுள்ளார் அம்மணி. இந்த நிலையில் இவர் மாடல் அழகி என்பதால் நல்ல கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட்களில் இருந்து சில சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நாயகி சீரியலில் இவரை குடும்பப் பாங்கான பெண்ணாக பார்த்த ரசிகர்கள் தற்போது இவரை இப்படி ஒரு கவர்ச்சியான ஆடைகள் பார்த்து வியப்படைந்துள்ளனர்.

Advertisement