கோபத்தில் கொந்தளித்த பத்திரிகையாளர்கள், தெறித்து ஓடிய ஜாலியோ ஜிம்கானா இயக்குநர்- முழு விவரம் இதோ

0
248
- Advertisement -

பிரபுதேவா படத்தின் ஜாலியோ ஜிம்கானோ படத்தின் பிரஸ்மீட்டில் வெடித்த கலவரம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பிரபலமான நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், பிரபு தேவாவின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கிறார்கள். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடி இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. ஆனால், சமீப காலமாக இவருடைய படங்கள் பெரிதாக வரவேற்கப்படவில்லை. இதனால் பிரபுதேவா சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

பிரபு தேவா குறித்த தகவல்:

பின் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இருந்தாலுமே இவருடைய படங்கள் முன்பு போல் பெரிய அளவு வெற்றி அடையவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த பேட்டா ராப் படமும் கலவியான விமர்சனத்தை பெற்றிருந்தது. வணிக ரீதியாகவும் இந்த படம் பெரிய வசூல் எதுவும் செய்யவில்லை. இதனை அடுத்து தற்போது இவர் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க காமெடி திரைப்படம்.

ஜாலியோ ஜிம்கானா படம்:

இந்தப் படத்தில் பிரபு தேவாவுடன் அபிராமி, மடோனா, ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ட்ரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் நவம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை எடுத்து போலீஸ்காரனா கட்டிக்கிட்டா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பயங்கர வைரலாகி இருந்தது. இந்த பாடல் முழுக்க டபுள் மீனிங் இருந்ததால் சர்ச்சையையும் கிளப்பியிருந்தார்கள். இந்த பாடலுக்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்க, ஆண்ட்ரியா பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பத்திரிகையாளர்கள் கேள்வி:

இந்த பாடலின் ஆசிரியர் ஜெகன் கவிராஜ். படத்தின் போஸ்டரில் பாடல்கள் ஜெகன் கவிராஜ் என்று இருந்தது. ஆனால், பாடலின் லிரிக்ஸ் வீடியோவில் வரிகள் சக்தி சிதம்பரம் என்று இருந்தது. இதைக் கண்டு பலருமே அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். ஆனால், இந்த விஷயத்தைப் பற்றி பாடல் ஆசிரியர் ஜெகன் கவிராஜ் எதுவுமே சொல்லவில்லை. இந்நிலையில் இன்று ஜாலியோ ஜிம்கானா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருந்தது. அதில், பாடலாசிரியர் பெயர் ஜெகன் என்று போடாமல் உங்கள் பெயர் ஏன் இருக்கிறது. ஒருவரின் அறிவை திருடுவது கேவலமாக இல்லையா? என்று ஆவேசத்தில் பத்திரிகையாளர்கள் இயக்குனர் சக்தி இடம் சராமரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால், அவர் எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

கலவரத்திற்கு காரணம்:

இதனால் இன்னும் பத்திரிகையாளர்களுக்கு கோபம் வந்தது. உடனே பிரபு தேவா, அவர்களை எல்லாம் சமாதானப்படுத்தி ஜெகனை மேடை ஏறி பேச வைத்தார். அப்போது ஜெகன், இந்த படத்தை எட்டு கோடி ரூபாய் பட்ஜெட் என்று சொன்னார்கள். ஆனால், 15 கோடி வரை செலவானது. இது தொடர்பாக எங்கள் தயாரிளிப்பளிடம் நான் சில விஷயங்களை சொன்னேன். அது இயக்குனர் சத்தி சிதம்பரத்தை கோபப்படுத்தி இருந்தது. அப்போதே அவர் தயாரிப்பாளரிடம் பாடலில் ஜெகன் பெயரை போடமாட்டேன் என்று சொன்னார். எங்கள் தயாரிப்பாளரும், ஜெகன் வளர்ந்து வரும் பையன். இப்படி பண்ணாதே, பெயரை போடுங்கள் என்று கோரிக்கை வைத்ததாக சொன்னார்.

Advertisement