25 வருடங்களுக்கு பின் ரீகிரியேட் செய்த ‘முக்காலா முக்காபுலா’ பாடல். பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள்..

0
2748
kadhalan
- Advertisement -

காதலன் படத்தில் இடம் பெற்ற ‘முக்காலா முக்காபுலா’ பாடலுக்கு பிரபு தேவா அவர்கள் ரீகிரியேட் செய்து ஆடி உள்ளார். தற்போது இந்த பாடல் குறித்து சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயைப் போல பல கருத்துக்கள் எழுந்து வருகின்றன. மேலும், அந்த பாடலை தற்போது புது ஸ்டைலில் வித்தியாசமான முறையில் ரீமேக் செய்யப்பட்டு நடனமாடி இருக்கிறார் நடிகர் பிரபு தேவா. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் பிரபுதேவா. ‘ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி’ திரைப் படத்தில் நடிகர் பிரபு தேவா அவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படம் குறித்த தகவலை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்தார்கள். அதோடு ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்பு தான் வெளியாகி உள்ளது. டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு பிரபு தேவா – நக்மா இருவரும் இணைந்து நடித்து வெளியான படம் “காதலன்”.

-விளம்பரம்-

இந்த திரைப் படத்தில் இடம் பெற்ற ‘முக்காலா முக்காபுலா’ பாடல் மிகவும் புகழ் பெற்றது. இப்போது கூட இந்த பாடலை கேட்டவுடன் ரசிகர்கள் நடனம் ஆட தொடங்கி விடுவார்கள். மேலும், இந்தப் பாடல் 25 வருடங்களுக்குப் பிறகு பிரபு தேவா அவர்கள் நடிக்கும் ‘ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி’ திரைப் படத்தில் ரீகிரியேட் செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டிரெய்லரில் இந்தப் பாடலின் சில காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதனால் ரசிகர்கள் பயங்கர குஷி ஆகி உள்ளார்கள். ரெமோ டிஸோஸா அவர்கள் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

- Advertisement -

இந்தத் திரைப் படத்தில் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். மேலும், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தின் பெயரைப் போன்றே நடனம் குறித்த திரைப் படமாக வரவிருக்கும் என்று தெரிய வந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படம் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பிரச்சினையை நடனப் போட்டி மூலமாகக் கூற வருகிறது என்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.

இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு உள்ளதாக தெரிய வந்து உள்ளது. சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து “தபாங் 3” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் 20 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவர இருப்பதாக தகவல் வந்து உள்ளது. மேலும், தபாங் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நடிகர் சல்மான் கானே இந்த படத்தை தயாரித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement