பெரிய நடிகர் என்றும் பாராமல் ‘நிலாவே வா’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விஜய்யை சந்தித்துள்ள மாபெரும் நடிகர் – வைரலாகும் அரிய புகைப்படம்.

0
4969
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கயல் தேவராஜ். இவர் கயல் படத்திற்கு முன்பாகவே பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது கயல் திரைப்படம் தான். மேலும், இவருக்கு சினிமா பற்றிய அனைத்து செய்திகளும் அத்துபடி. இந்த நிலையில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில், ஒரு புளோரில் விஜய் நடிக்கும் ‘நிலாவே வா’ ஷூட்டிங் நடந்தது. அப்போது வேறொரு புளோரில் பிரபு நடித்த ‘மனம் விரும்புதே உன்னை’ ஷூட்டிங் நடந்தது. நான் விஜய்யைப் பார்க்கச் சென்றிருந்தபோது, வேறொரு ஷூட்டிங்கில் பிரபு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றேன்.

- Advertisement -

அப்போது பிரபுவிடம், விஜய் ஷூட்டிங் பற்றி சொன்னேன். உடனே அவர், ‘நிலாவே வா’ ஷூட்டிங்கிற்கு வந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில் நான், மறைந்த நகைச்சுவைச் செல்வர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகர்கள் சஞ்சீவ், தாடி பாலாஜி போன்றோர் இருக்கிறோம்.

இன்று கேரவன் கலாசாரம் பெருகி விட்டது. ஒரே ஷூட்டிங்கில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கூட ஒருவரிடம் ஒருவர் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவ்வளவு (அ)நாகரீகம் வளர்ந்து விட்டது. பிரபு ஒரு சீனியர் நடிகர். தன்னை விட வயது குறைந்த விஜய்யைப் பார்க்க வந்திருந்த அவரது பண்பு, உண்மையிலேயே போற்றுதலுக்கு உரியது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement