நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். .பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவா நடிகை நயன்தாராவின் காதல் மலர்ந்தது.
பிரபுதேவா, நயன்தாராவுடனான பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். ஆனால், நயன்தாரா விக்னேஷ் ஷிவனிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.ச மீபத்தில் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபுதேவாவின் முதல் மனைவி பேசுகையில் நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது என்று கோபத்துடன் கூறி இருந்தார்.
பிரபுதேவாவின் இரண்டாம் திருமணம் :
இப்படி ஒரு நிலையில் பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகர் பிரபு தேவாவிற்கு கடந்த செப்டம்பர் மாதமே திருமணம் முடிந்துவிட்டது என்று பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியானது.கடந்த சில காலமாக பிரபுதேவா முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
பிசியோதெரபிஸ்ட்டை திருமணம் செய்த பிரபுதேவா :
அந்த முதுகுவலி பிரச்சினையை சரி செய்வதற்காக பிசியோதெரபிஸ்ட் ஒருவரிடம் பிரபுதேவா சிகிச்சை பெற்று வந்தாராம். அவருக்கு சிகிச்சை பார்த்தது ஒரு பெண் மருத்துவர் தானாம். முதுகு வலிக்காக அந்த பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவந்த பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டதால் காதும் காதும் வைத்தது போல பிரபுதேவா திருமணத்தையே முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியானது.
பிரபு தேவா வீட்டில் பார்ட்டி :
மேலும் பிரபுதேவாவிற்கு இரண்டாம் திருமணம் முடிந்தது உண்மை தான் என்று அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் கூறி இருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பிரபுதேவா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பெண் ஒருவரும் இருந்தார். அதை பார்த்த பலரும் அவர் தான் பிரபுதேவாவின் இரண்டாம் மனைவி என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபுதேவா தன் தோழிகளுக்கு வீட்டில் பார்ட்டி கொடுத்தார்.
திருப்பதிக்கு பிரபுதேவாவுடன் சென்றதும் இவர் தானா ? :
இதில் சங்கவி, குஷ்பூ மீனா, ரம்பா என்று பலர் பங்கேற்று இருந்தனர்.அந்த புகைப்படங்களை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் ஒன்றில் இருவர் மற்றும் ரசிகர்களுக்கு அறிந்திராத முகமாக இருந்தது. அதில் காலில் பொடியுடன் இருக்கும் ஒருவர் தான் பிரபுதேவா மனைவி என்று கூறப்படுகிறது. மேலும், திருப்பதியில் பிரபு தேவாவுடன் வந்த அதே பெண் போல தான் இவரும் தெரிகிறார்.