தாடி மீசை என்று பிரபுதேவா போலவே இருக்கும் அவரின் மகன் – மறைந்த நடிகர் பாண்டுவுடன் இறுதியாக அவர் எடுத்த போட்டோ.

0
765
prabudeva
- Advertisement -

மறைந்த நடிகர் பாண்டுவின் புகைப்படத்தை பகிர்ந்து பிரபுதேவா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டு இருக்கிறார். இவர் பிரபலமான நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிரபு தேவாவின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கிறார்கள். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடி இருக்கிறார். இவர் நடன ஆசிரியராக சினிமா உலகில் நுழைந்து 1989 ஆம் ஆண்டில் வெளியான இந்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

பிரபு தேவா திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், இவர் படம் என்றாலே அனைவரும் எதிர்பார்ப்பது அவருடைய நடனத்தை தான். அதோடு பிற நடிகர்களைக் காட்டிலும் பிரபு தேவா தன்னுடைய படங்களில் கடினமான ஸ்டெப்களை போடுவார். ஆனால், அவர் ஆடும்போது பார்க்கும் நமக்கு சாதாரணமாக தெரியும். அவர் போடும் எல்லா ஸ்டெப்களுமே ரொம்ப கஷ்டம் தான்.

பிரபு தேவா நடித்த படம்:

இப்படி பயங்கரமாக கலக்கி கொண்டு இருந்த பிரபுதேவா தன்னுடைய சொந்த பிரச்சனையால் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி நடிக்காமல் இருந்தார். பின் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த தேள் படம் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்கப்படவில்லை. கடைசியாக பிரபுதேவா பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ராதே என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

மை டியர் பூதம்:

ஆனால், அந்தப் படம் சரியாகப் போகவில்லை. தற்போது மீண்டும் இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மை டியர் பூதம். இந்த படத்தை ராகவன் இயக்கி இருக்கிறார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

பிரபுதேவா டீவ்ட்:

இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் யுங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், பொய்க்கால் குதிரை, ரெக்லா போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பிரபுதேவா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, மறைந்த நடிகர் பாண்டுவிடம் தன் மகன் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தை பிரபுதேவா பதிவிட்டு, உங்களை மிஸ் செய்கிறேன். நேற்று முதல் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டிற்கும் புகைப்படமும் பதிவும் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

Advertisement