10 ஆண்டு கழித்து கிடைத்த டபுள் தேவதைகள் – Twins மகள்களின் 5வது பிறந்தநாளை கொண்டாடிய பிரஜன் – சாண்ரா தம்பதி.

0
452
Prajin
- Advertisement -

சின்னத்திரையில் பிரபலமான தம்பதிகளில் ஒருவரான பிரஜன் – சான்ட்ரா தங்கள் Twins மகள்களின் வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கின்றனர். சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா சமீபத்தில் சஞ்சீவ் – ஆல்யா மானஸா என்று இப்படி வரிசையாக சொல்லிகொண்டே போகலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து தற்போது ரியல் லைப் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரபல சின்னத்திரை ஜோடிகளான பிரஜின்-சாண்ட்ரா.தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் பிரபலமான பிரஜனை திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கும் சான்ரா ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு அதற்கு முக்கிய காரணமே நான் ஒரு குழுந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது தான். அது எங்கள் தோழி ஒருவரின் குழந்தை படுபாவிங்க அந்த கொழந்தையை எங்க குழந்தையா ஆகிட்டாங்க. அதே போல 10 வருடம் ஏன் குழந்தை பெத்துக்களனு கேக்குறாங்க என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டிருந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த சான்ட்ராவிற்கு கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இதனால் பிரஜன் – சான்றா இருவரும் ஆனந்தத்தில் திளைத்தனர். மேலும், தங்களது மகள்களுக்கு மித்ரா, ருத்ரா என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்நிலையில் பிரஜின்-சான்ட்ரா தம்பதியினரின் அழகிய இரட்டை தேவதைகளின் இரண்டாம் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள்.

-விளம்பரம்-

அது நாள் வரை மகள்களின் முகத்தை காட்டாமல் இருந்து வந்த பிரஜன், முதன் முறையாக தனது மகள்களின் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டனர். இதற்கு பல பாராட்டுக்கள் குவிந்தது. இந்த நிலையில் தான் பிரபலங்கள் பிரஜன் மற்றும் சாண்ட்ரா ஆகியோரின் குழந்தைகளின் லேட்டஸட் புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தங்கள் மகள்களின் 5வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இரட்டை குழந்தைகள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே, கியூட் குடும்பம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். பிரஜன் பழைய வண்ணாரப் பேட்டை, அக்கு போன்ற ஒரு சில படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். அதன் பின்னர் D3 என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், இறுதியாக நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement