12 வயது இளையவருடன் திருமணம்.! 50 வயதில் குழந்தை.! இரண்டாம் திருமணம் குறித்து பிரகாஷ் ராஜ்.!

0
1387
Prakash-raj

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ் , தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர். நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு அற்புத கலைஞர்.

திரை வாழ்க்கை இவருக்கு சிறப்பாக அமைந்தாலும் இவரது முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்வில் இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜிற்கு ஏற்கென்வே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது பின்னர் தன்னை விட 12 வயது இளையவரான போனி கபூரை தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : சீரியலில் நடிக்க வரும் முன்பாக விஜயை நேரில் பார்க்க பார்வையாளராக வந்துள்ள நடிகை.! 

- Advertisement -

2010 ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜிற்கு 50 வயதில் வேதாந்த என்ற ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தது. தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார் பிரகாஷ் ராஜ். இதுகுறித்து பேசியுள்ள அவர், லதாவுக்கும் எனக்கும் பிரச்சினை இருந்தது. பொய்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று பிரிந்து விட்டோம். நான் நேர்மையாக இருக்கிறேன். லதாவும் நானும் வெளிப்படையாக பேசி பிரிந்தோம். இதையெல்லாம் பார்த்தே எனது குழந்தைகள் வளர்ந்தனர். குழந்தைகளுடன் நிறைய மனம் விட்டு பேசுவது அவர்களை நம்முடன் நெருங்க வைக்கும் என்று கூறியுள்ளார்.

Image result for prakash raj first wife

இவரது முதல் திருமணம் 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவருடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகளும் சித்து என்ற ஒரு மகனும் பிறந்தனர்.இவரது மகனுக்கு 4 வயது இருக்கும் போது விளையாடுகயில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

நீண்ட மாதங்கள் சிகிச்சை பெற்று வந்து இவர்களது மகன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகனின் பிரிவிற்கு பின்னர் தனது முதல் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார். இருப்பினும் தனது இரண்டு மகள்களையும் தன்னுடைய வளர்ப்பில் வைத்து வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

Advertisement