ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தான் மோடி தூங்குறார், Bjp பிரபலம் சொன்ன தகவல் – கேலி செய்த பிரகாஷ் ராஜ்.

0
276
modi
- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்த கருத்தை விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்ட ட்விட்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். பிரகாஷ்ராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது செல்லம் தான். அந்தளவிற்கு கில்லி படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி இருக்கிறார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும் சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

- Advertisement -

மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் அளித்த பேட்டி:

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து டீவ்ட் போட்டிருக்கிறார். அது என்னவென்றால், கடந்த ஞாயிறன்று மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் உரையாடி இருந்தார். அப்போது அவர் கூறியிருப்பது, கோலாப்பூர் இடைத்தேர்தலில் சத்யஜித் வேட்பு மனுவை பாஜக தேசியத் தலைமைக்கு அனுப்பி பரிந்துரை செய்திருக்கிறோம். மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரகாந்த் ஜாதவின் மனைவி இந்த தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தால் அவருக்கும் வேட்புமனு வழங்கப்படும்.

மக்களவைத் தேர்தல் குறித்து கூறியது:

மேலும், நாடாளுமன்றத்தில் நாம் பல திட்டங்களை செய்து முடிப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை கட்டாயம் தேவை. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நீங்கள் முழு ஈடுபாட்டை காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை வழங்கி உதவி இருக்கிறார். இது உலகில் எவ்வளவு பயனுள்ள செயல் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். இந்தியாவில் இதற்கு முன் இரண்டு முறை இந்துக்கள் அதிகம் ஓங்கியிருந்தது. முதல்முறை பிரிதிவிராஜ் சவுகான் காலத்தில் இந்துக்கள் அதிக ஆதிக்கம் இருந்தது.

-விளம்பரம்-

நரேந்திர மோடி குறித்து மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் கூறியது :

பின் இரண்டாவது முறை சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்துக்கள் இந்தியாவில் ஆதிக்கம் ஓங்கியது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி காலத்தில் தான் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்காக நான் சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைத்த தூங்காமல் இருப்பதற்கு பல்வேறு வித்தைகளை கற்று வருகிறார். தற்போது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். இனி 24 மணி நேரமும் தூங்காமல் இருப்பார்.

பிரகாஷ் ராஜ் பதிவிட்ட டீவ்ட்:

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் பாஜக வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் இந்த செய்தியை பகிர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, தயவுசெய்து சற்று புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். தூங்க முடியாமல் இருப்பது இன்சோம்னியா எனப்படும் நோய். அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அது குறித்து பெருமை பேசாதீர்கள். தயவுசெய்து உங்கள் தலைவரின் நலனில் அக்கறை செலுத்துங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ள டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement