ரஜினி, விஜய், கமல் எல்லாம் என்ன ஜாதினு ஏன் கேட்கல.! பிரபல நடிகர் விளாசல்.!

0
288
rajini-kamal-vijay

தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் நடிகர் ரஜினி, கமல், விஜய், இவர்கள் மூவர் மீதும் அரசியல் சார்ந்து பல்வேறு விமர்சனங்களை அரசியல்வாதிகள் முன்வைத்து வருகின்றனர். அதிலும் ரஜினி தமிழரா, விஜய் ஒரு கிரிஸ்துவர் என்று சில அரசியல் காட்சிகள் விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் பிராகாஷ் ராஜ், இது குறித்து சரமாறியாக கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ் ராஜிடம், நீங்கள் பி ஜே பி யை நேரடியாக எதிர்க்கின்றீர்களே,அதற்கு காரணம் நீங்கள் கிருஸ்துவர் என்பதாலா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், இது ஒரு அசிங்கம் இல்லயா , தளபதி விஜய் கிறிஸ்டியன் என தமிழ்நாட்டு மக்கள் அவர் என்னிக்காவது கிருஸ்துவர் என்று யோசித்தார்களா? ரஜினி என்ன ஜாதி என கேட்டார்களா? கமல் என்ன ஜாதி கேட்டார்களா?. கலைஞர் என்ன ஜாதி என்று மக்கள் கேட்டார்களா? இப்படி ஒரு சிந்தனையை ஏன் கொண்டுவருகிறீர்கள்? என்று பேசியுள்ளார்.