சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் Baby Bump புகைப்படத்தை வெளியிட்ட மாஸ், சகுனி பட நடிகை பிரணிதா.

0
284
Pranitha
- Advertisement -

சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தற்போது முதன் முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை பிரணிதா. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பிரனீதா சுபாஷ். கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனீதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is pranitha-1024x683.jpg

மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக பிரனீதா சுபாஷ் நடித்து இருந்தார். இவருக்கு அழகான தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும் சூர்யாவை தவிர வேறு எந்த முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சூரிளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

பிரணிதா சுபாஷ் திரைப்பயணம்:

பின் தமிழில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிரனீதா சுபாஷ் அவர்கள் கன்னடம், தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்ல தற்போது ஹிந்தியில் வெளியாக இருக்கும் புஜ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரனீதா சுபாஷ் அறிமுகமாக இருக்கிறார். இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்திருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is prani11-664x1024.jpg

பிரணிதா சுபாஷ் திருமணம் செய்த நபர்:

இப்படி ஒரு நிலையில் இவர் திடீர் திருமணம் செய்து கொண்டது இவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கை ஏற்படுத்தியது. இவர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த ஆண்டு மே 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். பின் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

பிரணிதா சுபாஷ் திருமணம்:

இதனை அடுத்து தன்னுடைய திருமணத்தை உறுதி செய்ததை பிரனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் தன்னுடைய திருமண புகைபடங்கள், தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என எல்லாத்தையும் தன் ரசிகர்களுக்காக பதிவிட்டு கொரோனா சூழ்நிலை காரணமாக அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றும் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த பலரும் பிரனிதாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள்.

முதல் முறையாக பதிவிட்ட புகைப்படம் :

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் கணவரின் பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் பிரணிதா. அந்த பதிவில் ‘என் கணவரின் 34வது பிறந்த நாளில் கடவுள் எங்களுக்கு தந்த வரம்’ என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement