19 ஆண்டுக்கு பின் நான் அறிமுகமான ஹீரோவுடன் மீண்டும் இணைக்கிறேன் – கனிகா உருக்கமான பதிவு.

0
856
prasanna
- Advertisement -

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபைவ் ஸ்டார் படத்தின் ஜோடி இணை இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்கள். இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பைவ் ஸ்டார். இந்த படத்தில் பிரசன்னா, கார்த்திக், கிருஷ்ணா, கனிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் தான் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை கனிகா சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார்கள். இந்த படம் 5 நண்பர்களை சுற்றி நடக்கும் கதையை பின்னணியாகக் கொண்டது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் அன்றைய காலத்தில் இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு அனுராதா ஸ்ரீராம் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் பரசுராம் இசை அமைத்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இணையாக பாடல்களும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரசன்னா-கனிகா ஜோடி மீண்டும் இணைய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மீண்டும் இணையும் 5 ஸ்டார் ஜோடி:

அல்லு அர்ஜுனின் அஹா ஓடிடி தளம் தயாரிக்கும் புதிய சீரிஸில் தான் பிரசன்னா கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கனிகா நடிக்கிறார். மேலும், விக்னேஷ் விஜயகுமார் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். இந்நிலையில் இது குறித்த தகவலை தற்போது நடிகை கனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுசிகணேசன் படத்தின் மூலம் என்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியது.

வைரலாகும் கனிகாவின் பதிவு:

இப்போது இருபது ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய முதல் திரை ஜோடியான பிரசன்னாவுடன் மீண்டும் இணைகிறேன். இது ஒரு முழு சுழற்சி போல இருக்கிறது. உன்னோடு பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் பிரசன்னா என்று கனிகா, பிரசன்னா உடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். தற்போது கனிகா பதிவிட்டு இருக்கும் புகைப்படமும் பதிவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த 90ஸ், 2k கிட்ஸ் எல்லோரும் உற்சாகத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

கனிகாவின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் கனிகா. இவர் 5 ஸ்டார் படத்தை தொடர்ந்து தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். பின் 2008 ஆம் ஆண்டு அமெரிக்க சாஃப்ட்வேர் எஞ்சினியரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். தற்போது கனிகா மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார்.

பிரசன்னாவின் திரைப்பயணம்:

அதே போல் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக பிரசன்னா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் சமீபகாலமாக இவர் நடித்து வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement