மாஃபியா படத்தில் அருண் விஜய் கெட்டப்பையே மிஞ்சிய பிரசன்னா.! வைரலாகும் புகைப்படம்.!

0
8492
Mafia

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் நீண்ட வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து.

தற்போது பிரபாஸ் நடிப்பில் தமிழ்,ஹிந்தி தெலுங்கு என்று மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் துருவங்கள் பதினாறு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய்.

இதையும் பாருங்க : ஆர்வக்கோளாறில் வாய்விட்ட சிவகுமார்.! குடும்பத்தையே கலாய்த்த எஸ் வி சேகர்.! 

லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அருண் விஜய்க்கு வில்லனாக டிகே என்ற ரோலில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரசன்னாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் படத்தின் ஹீரோ அருண் விஜய்க்கு இணையாக படு ஸ்டைலாக இருக்கிறார் பிரசன்னா. நடிகர் பிரசன்னா ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் வில்லனாக அசத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து பேசிய இந்த படத்தின் இயக்குனர் நரேன், இது, வட சென்னை கதையல்ல. `மாபியா’ முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தை கொண்ட படம். அருண் விஜய் கடத்தல் கும்பலின் தலைவராக நடிக்கவில்லை. படத்தில், பிரசன்னா மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பிரியா பவானி சங்கரும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் வருவார் என்று கூறியுள்ளார்.