தல அஜித் படத்தில் வில்லனாக நடிக்க இருந்த வாய்ப்பு தவறியது வருத்தத்தை அளிக்கிறது என்று பிரபல நடிகர் டீவ்ட் போட்டு உள்ளார். தற்போது இது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தல அஜித் திகழ்ந்து வருகிறார். தல அஜித் படமென்றாலே திரையரங்களில் திருவிழா போன்று கூட்டம் கலைக்கட்டும். அந்த அளவிற்கு அஜித்துக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவருடைய நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் திரையரங்கிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கிளிப்கள் என வலிமை படம் அப்டேட்டுகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது.
இதையும் பாருங்க : என்ன மாரியம்மா இது ? நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ள சார்பட்டா பட நடிகை.
இதனால் ரசிகர்கள் மத்தியில் வலிமை படம் குறித்து அதிக எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகிறது. இந்த நிலையில் வலிமை படத்தின் இயக்குனர் வினோத் அவர்கள் வலிமை படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டியில் பேசி இருந்தார். அந்தப் பேட்டியில் வினோத் கூறியது, வலிமை படத்தின் கதையை அஜித்திடம் முதலில் சொன்னபோது வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு சொல்லி இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு கைநழுவி தெலுங்கு நடிகர் கார்த்திக்கு சென்றது என்று கூறினார்.
இதை பார்த்த நடிகர் பிரசன்னா இதுகுறித்து டீவ்ட் போட்டு உள்ளார். அதில் பிரசன்னா கூறியது, எனது அன்புக்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சியாக உள்ளது. வலிமை படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு நழுவியது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம், இழப்பு தான். இருந்தாலும் பெரிய விஷயங்கள் என்னை சேரும் என்று நம்புகிறேன் என கூறி இருந்தார். இப்படி இவர் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.