சினேகாவிற்கு ஏற்பட்ட பிரசவ வலி, இரண்டாவது குழந்தை.. கண்ணீருடன் கூறிய பிரசன்னா..

0
153823
sneha-prasanna
- Advertisement -

சினிமா திரை உலகில் பிரபலமான நடிகர்களான பிரசன்னா மற்றும் சினேகா பிரபலமான காதல் ஜோடிகளாவர். மேலும், அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது என்றும் சமீபத்தில் தான் வளைகாப்பு நடந்து முடிந்தது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதுமட்டும் இல்லாமல் சினேகா குடும்பத்தினர் வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையங்களில் பதிவிட்டு இருந்தார்கள். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும். மேலும், சினேகா அவர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், அழகான தோற்றத்திற்கும், நடிப்புத் திறனுக்காகவும் தான் ரசிகர்கள் இவரை இன்னும் விரும்புகிறார்கள். தற்போது அவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார். சினிமா திரையுலகில் உள்ள நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று.

-விளம்பரம்-
Image result for prasanna sneha

இவர் 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார்கள். பின்னர் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும், 2011ம் ஆண்டு பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது இரண்டாவது முறை சினேகா அவர்கள் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் இணையங்களில் பரவியது. அதுமட்டுமில்லாமல் சினேகா கர்ப்பமாக உள்ளார் என்று அறிந்தவுடன் குடும்பமே அவருக்கு வளைகாப்பு நடத்தி சந்தோஷமான தருணத்தை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

ஆனால், சினேகாவை பார்த்தால் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்ப முடியாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் சினேகா-பிரசன்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள் .முதல் குழந்தையின் பெயர் விகான். தற்போது சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர் என்றும் கூறி இருந்தார்கள். சினேகா எப்போதுமே மிக எளிமையாக அனைவரிடம் பழகும் குணம் உடையவர். இதுகுறித்து பிரசன்னா கூறியது,சினேகாவின் இந்த குணம் தான் என்னை அவர் மீது காதல் ஏற்பட செய்தது. மேலும், ஒவ்வொரு அம்மாவும் தெய்வம் ஆவது அவர்களின் பிரசவத்தின் போதுதான்.

Image
Image

அப்படி சினேகா பிரசவத்தின்போது பட்ட கஷ்டங்களை நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். கடைசி நேரத்தில் சினேகாவுக்கு பிரசவ வலி வராமல் இருந்தது. அதனால், மருத்துவர்கள் சினேகாவிற்கு பிரசவ வலி வருவதற்கு பெரிய இன்ஜெக்ஷன் எடுத்து வந்தார்கள். அப்போது, நான் சினேகாவின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், என்னால் அதை பார்க்க முடியாமல் தலை சுற்றி போய் நான் ஓரமாக அமர்ந்து விட்டேன். அப்படி இன்ஜெக்ஷன் போடும் வலி வரவில்லை. அதனால், அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக தான் விகான் பிறந்தான்.மேலும், சினேகா அவர்கள் சின்ன தலைவலியை கூட தாங்கி கொள்ள முடியாதவர். எப்படி? பிரசவ வலியை பொறுத்துக் கொண்டார் என்று தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மேலும், தற்போது நாங்கள் இரண்டாவது குழந்தையின் வரவை நோக்கி எதிர் நோக்கி கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement