விக்ரம் போஸ்டரை பாத்துட்டு 10 பேரும் தியேட்டரில் இருந்து வெளியே வந்துட்டாங்க. பிரசன்னா சொன்ன தகவல்.

0
76461
vikramprasanna
- Advertisement -

தென்னிந்தியா சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய அனுபவமும் மூலம் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் தான். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”.

-விளம்பரம்-
#ChiyaanVikram

" Vikram sir lam enakku periya inspiration life la "#Actor_Prasanna shares an interesting moment about #ChiyaanVikram and how far he inspired him to #cinemapayyan #spotlight #sunmusic FullVideo : https://t.co/i0s5MR6C2s

Chiyaan The Perfect Maestro ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಮಾರ್ಚ್ 3, 2020

நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறாராம் . இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

- Advertisement -

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரசன்னா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் விக்ரம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, இயக்குனர் ராதாமோகன், தரணி சார் எல்லாம் உதவி இயக்குனராக இருந்த போது எல்லாரும் சேர்ந்து படம் பார்க்க சென்றார்கள்.

Image result for Actor prasanna interview

-விளம்பரம்-

படம் பார்க்க டிக்கெட் எடுக்க போனார்கள். அப்போது டிக்கெட் கவுண்டரில் படத்தின் போஸ்டர் இருந்தது. அதில் விக்ரம் சாரோட போட்டோ ஓரத்தில் போடப்பட்டிருந்தது. அதை பார்த்து விட்டு அவர்கள் எல்லோரும் இவன் படம் ஓடாது, நல்லா இருக்காது என்று சொல்லி அப்படியே வந்த பத்து பேருமே படம் பார்க்காமல் வெளியே போய் விட்டார்கள். இதை தரணி ஒரு முறை சொல்லி இருந்தார். அப்படி ஒரு இடத்தில் இருந்த நடிகர் விக்ரம் தற்போது சினிமா உலகில் மிகப்பெரிய இடத்தில் உள்ளார்.

ஒரு படம் அவர் வாழ்க்கையே மாற்றி விட்டது. இப்போது அவர் தேசிய விருது என்று பல விருதுகளை வாங்கி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சினிமா யாருடைய லைப்பை எப்படி வேண்டுமானாலும் மற்றும். அது நம்மை எங்கு கொண்டு போய் வைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. விக்ரம் அவர்கள் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக இன்றைய இளைஞர்களுக்கு உள்ளார் என்று கூறினார்.

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான நடிகர்களில் பிரசன்னாவும் ஒருவர். இவர் மணி ரத்னம் தயாரிப்பில் வெளிவந்த ஸ்பை ஸ்டார் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகர் பிரசன்னா நடித்து உள்ளார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் இவர் சமீபகாலமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் பிரசன்னா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஃபியா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது.

Advertisement