தமிழ்சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவரது காலத்திலிருந்து விஜய், அஜித்தை விட இவருக்கு ஏகப்பட்ட மவுஸ் இருந்தது. எனவே, நடிகர் பிரசாந்த் இளைய தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் என்று அப்போது கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வந்த பிரசாந்த். இடையில் ஏற்பட்ட சில தோல்விப் படங்களாளும் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவும் சினிமாவில் மாபெரும் சறுக்கலை கண்டிருந்தார்.

அதுபோக இடையில் உடல் எடை கூடியதால் இவருக்கு படங்களில் வாய்ப்பு சரியாக அமையவில்லை இந்த நிலையில் தற்போது நடிகர் பிரசாந்த் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மோகன் ராஜாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் பிரசாந்த் இருக்கு ஒரு சிறந்த ரீஎன்ட்ரீ படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் கடந்த ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : விஜய்க்கு முன்பாகவே சத்யராஜுடன் இணைந்து நடித்துள்ள அஜித். எந்த படம் தெரியுமா ? புகைப்படம் இதோ.

Advertisement

இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படம் ஆகும். இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம், வசூலையும் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீ மேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பல கோடி கொடுத்து வாங்கிய நிலையில் இந்த படத்தினை தமிழில் ரீ மேக் செய்ய இருக்கிறார்கள். இந்த படத்திற்காக நடிகர் பிரசாந்த் 20 கிலோவை குறைந்துள்ளதாக பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள அவர், பிரஷாந்த் கடந்த ஆறு மாதமாக வெளிநாட்டில் பியானோ கலையை கற்று வந்தார். மேலும், கடந்த 6 மாதத்தில் 20 கிலோ பிரஷாந்த் குறைத்திருக்கிறா.ர் மேலும், 5 கிலோவை குறைப்பதற்காக மலேசியா சென்று பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறியுள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். மேலும், இந்த படத்தை ரீமேக் செய்ய மோகன் ராஜா தான் ஒரே தேர்வாக இருந்தார் என்றும், இவர் பிற மொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வதில் கைதேர்ந்தவர். அவ்வாறு இவர் ரீமேக் செய்து இயக்கிய பல படங்கள் வெற்றி பெற்று உள்ளன. இதன் காரணமாக தான் பாலிவுட்டில் வெற்றி பெற்ற இந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கினால் சரியாக இருக்கும் என முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement
Advertisement