விஜயகாந்த்தை திருமணம் செய்த அனுபவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பகிர்ந்திருக்கும் சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர் என்றே சொல்லலாம். இவரை தேடி யார் வந்தாலும் சாப்பாடு போட்டு அன்போடு அனுசரிப்பார்.

Advertisement

விஜயகாந்த் உடல்நிலை:

தன்னால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்வார். இவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமலே போயிருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர் சில ஆண்டுகளாக உடல் நல குறைவின் காரணமாக அவஸ்தை பட்டு வருகிறார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் கொடுக்கப்பட்டு தான் வருகிறது. மேலும், இவர் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.

விஜயகாந்த் பிறந்தநாள்:

இந்நிலையில் இன்று கேப்டன் விஜயகாந்தினுடைய பிறந்தநாள். இவருடைய பிறந்த நாளுக்கு தொண்டர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்கள் பேட்டியில் விஜயகாந்த் குறித்து பகிர்ந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் கல்லூரி படிப்பை முடித்த உடனே கேப்டனை திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. எங்களுடைய திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட தினம் தான்.

Advertisement

விஜயகாந்த் திருமணம்:

என்னை கேப்டன் பெண் பார்க்க வரும் போது தான் நான் அவரை முதல் தடவை பார்த்தேன். காவி வேஷ்டி கட்டி, மாலை போட்டு, காலில் செருப்பு கூட இல்லாமல் இறங்கி வந்தார். எங்க அம்மா எல்லோருமே எவ்வளவு பெரிய ஹீரோ நம்ம வீட்டுக்கு வருகிறார். அவரை பயங்கரமா வரவேற்கணும் என்றெல்லாம் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், அவர் இறங்கி வந்த விதமே பார்த்து இவர் ஒரு ஹீரோ மாதிரி இல்லை என்று 5 செகண்டிலேயே அவரை எல்லோருக்குமே பிடித்து விட்டது. அப்ப கூட அவர நான் சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கிறேன்.

Advertisement

விஜயகாந்த் குறித்து சொன்னது:

இப்போ போய் பொண்ணு பார்க்கலாமா என்று கேட்டிருக்கிறார். அப்போ கேப்டனுக்கு தொடர்ந்து சூட்டிங் இருக்கும். எங்களுக்கு கல்யாணம் முடிந்த ஒரு மூணு நாள் தான் அவருக்கு ரெஸ்ட். எங்களுடைய ஹனிமூன் ஊட்டியில் தான். அதுக்கு கூட சூட்டிங் ஆக தான் போயிருந்தோம். கேப்டன் வெளியில் ஒரு மாதிரி, வீட்டில் ஒரு மாதிரி எல்லாம் கிடையாது. அவருக்கு வீட்டுக்கு யார் வந்தாலும் எல்லோருக்கும் சாப்பாடு போடணும். ரொம்ப எளிமையா இருப்பார். எல்லோரிடமும் அன்பாக பழகுவார் பல என்று கூறி இருந்தார்.

Advertisement