அட, பிரேமம் படத்தில் சிறு வயது மடோனாவாக வந்த பொண்ணா இது ? இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

0
737
Premam
- Advertisement -

பிரேமம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது பிரபலமான நடிகர்களாக இருக்கும் பல பேர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்து இருக்கிறார்கள். பேபி ஷாலினி,சிம்பு தொடங்கி பல நடிகர்கள் குழந்தை சிறு வயதிலேயே சினிமா துறையில் நுழைந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரேமம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஈவா பிரகாஷ்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is p11111.jpg

ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் தான் வெளிவந்தது. ஆனால், தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை இன்றும் கூட மறக்க முடியாது. இந்த படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

- Advertisement -

ப்ரேமம் படம் பற்றிய தகவல்:

இன்னும் அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்கள் மனதிலேயே நிற்கிறது என்று சொல்லலாம். இந்த படம் தமிழில் சேரன் இயக்கத்தில் வந்த ஆட்டோகிராப், மற்றும் ஜெயம் ரவியின் தீபாவளி படமும் கலந்த கலவையாக தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்கள் திகழ்கிறார்கள். நிவின்பாலி தொடங்கி சாய்பல்லவி, அனுபமா என பலரும் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

This image has an empty alt attribute; its file name is p2222-1024x768.jpg

ப்ரேமம் படத்தில் கதாநாயகிகள்:

அதிலும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் சாய்பல்லவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் ஒரு முத்திரை பதிக்க முடிந்தது. சமீபத்தில் கூட இவருடைய நடிப்பில் வெளிவந்த ஷியாம் சிங்கா ராய் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதேபோல் அனுபமாவும் இந்த படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக அனுபமா திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் செலின் கதாபாத்திரத்தில் நடித்தவர்:

இப்படி எல்லாருடைய வாழ்க்கையை மாற்றிய படமாக பிரேமம் திகழ்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிறுவயது மடோனாவாக அதாவது செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஈவா பிரகாஷ். படத்தில் இவர் அனுபமாவுடன் பள்ளிக்கு செல்லும்போது குழந்தையாக ஒரு சிறுமி ஒருவர் வருவார். அவர் தான் ஈவா பிரகாஷ். பின் இவர் வளர்ந்து மடோனா செபாஸ்டின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும், படத்தில் நிவின் பாலிக்கு அனுபமா, சாய்பல்லவி என பல பேர் காதலித்து இருந்தாலும் கடைசியில் இவருக்கு ஜோடியாக செலின் கதாபாத்திரத்தில் நடித்த மடோனா செபாஸ்டின் தான் வருவார்.

This image has an empty alt attribute; its file name is p33333-1024x768.jpg

ஈவா பிரகாஷ் தற்போது இருக்கும் புகைப்படம்:

அதாவது அனுபமா உடன் சிறு வயதில் இருந்த செலின் அதாவது ஈவா பிரகாஷ் தான் நிவின் பாலிக்கு ஜோடி. இந்நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து பலரும் வியந்து விட்டார்கள். அந்த அளவிற்கு ஈவா பிரகாஷ் நன்றாக வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். தற்போது ஈவா பிரகாஷின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் பிரேமம் படத்தில் வந்த செலினா! இது என்று கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவரின் புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement