நடிகர் பிரேம்ஜியின் மனைவியும், மாமியாரும் ஆரம்பித்திருக்கும் புது பிசினஸ் குறித்த தகவல்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகர் ஆவார்.
நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் பேச்சுலர் ஆக சுற்றிக் கொண்டிருந்த பிரேம்ஜிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. இவர் இந்து என்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். இந்து சேலத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய திருமணம் சமீபத்தில் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் நடந்த நிலையில் முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
பிரேம்ஜி மாமியார்:
நடிகர் பிரேம்ஜி திருமணம் முடிந்த பிறகு சோசியல் மீடியாவில் தனது ரிலீஸ்கள் மூலம் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது பிரேம்ஜியின் மனைவி இந்து மற்றும் மாமியார் ஷர்மிளாவும் சேர்ந்து வீட்டிலேயே மசாலா தயாரிக்கும் பிசினஸை செய்து வருகின்றனர். அவர்கள் தயாரிக்கும் மசாலாவிற்கு, ‘ பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா’ என்றும் பெயரும் வைத்துள்ளனர். இது குறித்து பிரேம்ஜியின் மாமியார், எங்கள் சொந்த ஊர் சேலம். நாங்க பெரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவங்க.
பிரேம்ஜி மாமியார் மசாலா குறித்து:
நாங்க சமையலுக்கு தேவைப்படும் மசாலா எல்லாம் வெளியில் வாங்க மாட்டோம். எங்க மாமியாரே எல்லாத்தையும் ரெடி பண்ணுவாங்க. இப்போ நானும் அதை கத்துக்கிட்டேன். என் பொண்ணுக்கு திருமணம் ஆனதும் வீட்டில் தயாரித்த எல்லா பொடியையும் அனுப்பி வைத்தேன். பிரேம்ஜி தம்பிக்கு ரொம்ப புடிச்சுப்போச்சி. மசாலாவை வீட்டிலேயே தயாரிக்க காரணமே பிரேம்ஜி தம்பிதான். அதனால்தான் அவரோட பெயரை வைத்தோம் என்றார். முதலில் அவரோட பேட்டியை எல்லாம் பார்த்துட்டு பெண்ணே கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் பார்த்தா ரொம்ப தங்கமான புள்ளையா இருக்காரு என்று கூறியுள்ளார்.
பிரேம்ஜி மனைவி:
பின் இது குறித்து பிரேம்ஜியின் மனைவி இந்து, நான் ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஹாஸ்டலில் படித்ததால் எனக்கு சமைக்க தெரியாது. கல்யாணம் முடிந்த பிறகு அம்மாவிடம் கேட்டு தான் சமைப்பேன். அப்புறம் அவரும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாரு. முதலில் பாக்கெட் மசாலாவில் சமைத்து சாப்பிட்டு நெஞ்செரிச்சல் வந்ததால, அம்மா தான் மசாலா எல்லாம் கொடுத்து அனுப்புவாங்க. அவருக்கு அம்மா தயாரிக்கிற மசாலா பொருட்கள் வைத்து செய்கிற சமையலை விரும்பி சாப்பிடுவார்.
தரம் நல்லா இருக்கும்:
அதே மாதிரி கங்கை அமரன் அங்கிளும் சாப்பிட்டுட்டு சூப்பரா இருக்குன்னு சொன்னாரு. இப்படி எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னதால இதையே ஒரு பிசினஸா பண்ணலாம்னு பிரேம்ஜி தான் ஐடியா கொடுத்தாரு. எங்களோட ‘பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா’ பேஜுக்கு வந்து ஆன்லைன்ல நிறைய பேர் ஆர்டர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எங்களோட தரம் தான் இதற்கு காரணம். விலையும் ரொம்ப கம்மியா இருக்கும் என்று ‘பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா’ சீக்ரெடை இந்து பகிர்ந்துள்ளார்.