இந்நிலையில், இவரது பெயரில் பல டிவிட்டர் அக்கவுன்ட்கள் இருக்கின்றன. அவற்றில் இவரின் உண்மையான அக்கவுன்ட் எதுவென தெரியாமல் இருந்து வந்தது. அதனை தற்போது உறுதிப்படுத்தும் விதமாக, ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இதுதான் ஒரிஜினல் அக்கவுன்ட். என் பெயரில் நிறைய ஃபேக் அக்கவுன்ட்கள் இருப்பதை நான் பார்க்கிறேன். அதனால், நிறைய குழப்பங்கள் வருகின்றன. எனவே, எனது இந்த டிவிட்டர் அக்கவுன்ட்டை அதிகாரப்பூர்வமானதாக மாற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த வீடியோவும் அதன் முயற்சியே" என்று கூறியிருந்தார். இவர் தற்போது, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக 'மான்ஸ்டர்' எனற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Sorry for the inconvenience caused by fake accounts. Hope to get the issue resolved soon. Thanks for the understanding! @TwitterIndia pic.twitter.com/SiaKagbpir
— Priya BhavaniShankar (@priya_Bshankar) October 5, 2018





