ப்ரியா பவானி ஷங்கருக்கு ஷாக் கொடுத்த விஜய்.!

0
996
vijay

விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து பின்னர் வைபவ் நடித்த “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். சமீபத்தில் இவரது நடிப்பை கண்ட நடிகர் விஜய் தன்னை பாராட்டி வாழ்த்துக்கள் கூறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

priya-bhavani

தமிழ் சீரியல்கள் பல நடிகர் , நடிகைகளுக்கு சினிமாவில் நுழைய ஒரு பாலமாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் பிரபலமான சீரியல்களில் நடித்து விட்டால் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து பின்னர் சினிமாவில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

விஜய் டிவியில்” ராஜா ராணி ” என்ற தொடரில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இருக்கு பட வாய்ப்பும் தேடி வந்தது. 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மேயாதமான்’ என்ற படத்தில் நடித்து சினிமா உலகில் கால் பதித்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம் ‘ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

vijay actor

இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பை நடிகர் விஜய் பாராட்டியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரியா பவானி ஷங்கர், நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் , அந்த பதிவில் “நான் முதலில் விஜய்யிடம் இருந்து பாராட்டு வந்ததை யாரோ கலாய்கிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால், அது உண்மை என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் இந்த அன்பிற்கும், அங்கீகாரத்திற்கு தகுதியுடையவரா என்று தெரியவில்லை. ஆனால், நான் கண்டிப்பாக மேலும் கடினமாக உழைப்பேன் ” என்று தெரிவித்துள்ளார்.