பிரியா பவானி ஷங்கர் வயசானல் இப்படி தான் இருப்பார்களாம்.! அவரே பதிவிட்ட புகைப்படம்.!

0
9926
a-bhavani-shnakar
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல்வேறு செலஙஞ்சுகள் வைரலாகி வருகின்றன. சம்பீத்தில் பாட்டில் கேப் செலஞ்ச் ச,சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது faceapp எனப்படும் புதிய செயலி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்த செயலியை பயன்படுத்தி நாம் வயதான காலத்தில் எப்படி இருப்போம் என்பதை புகைப்படமாக காண முடியும். தற்போது இந்த செயலியை பயன்படுத்தி பல்வேறு பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் தாங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்ற புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : என்னோட 50 ஓட்டும் இவருக்கு தான்.! எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதி ஓபன் டால்க்.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த செயலியை பயன்படுத்தி பிரியா பவானி சங்கர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் மிகப்பெரிய நடிகரான கமலின் ‘இந்தியன் 2 ‘ படத்தில் பிரியா பவானி சங்கர் கமிட் ஆகியுளளார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சமூக வளைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் faceapp செயலியை பயன்படுத்தி, தான் வயதான நிலையில் எப்படி இருப்பேன் என்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement